Wednesday, 14 January 2015

படி விழா 2015 : நாள்: 01.02.2015 ஞாயிறு

படி விழா பல பகுதி ஆலயங்களில் சிறப்பாக நடை பெற்று வருவதை நாம் நன்கு அறிவோம்.ஆனால் அதன் பின்னணியையைப்பற்றி ஒரு சிலரே அறிவர்.மற்றும் சுவாரஸ்யமானதும் கூட.

திருத்தணியில்1917 ஜனவரி முதல் தேதி அன்றே படி விழா  தொடங்கி வைத்தவர் சச்சிதானந்த வள்ளிமலை சுவாமிகள் தான்..அது சுவாரஸ்யமான ஒரு தொடக்கம்.அந்த கால கட்டத்தில்,நம்மவர்கள் நம்மை ஆண்ட ஆங்கிலேய பிரபுக்களை தங்கள் சுயநலம் கருதி அந்த புத்தாண்டு தினத்தில் "துரையே " என வணங்கி பல பரிசுகளை வழங்கி வந்தனர்.துரைகளுக்கு துரையாக நம்மை வாழ வைக்கும் நம் பெருமானை வணங்காமல் ,அவர்களை போற்றிய மக்களைக்கண்டு மனம் வெதும்பி,அவர்களை திசை திருப்ப "திருத்தணி திருப்புகழ் திருவிழா " என்ற அமைப்பை ஏற்படுத்தி படி விழா தொடங்கினார்.

ஆண்டு முழுவதும் நாம் செய்த பாவங்களை களையவும் ,புத்தாண்டு வளமாக அமையவும் பெருமானின் கருணை வேண்டியும் டிசம்பர் 31 இரவு முதல் மறுநாள் புத்தாண்டு காலை வரை படிவிழா திருத்தணியில்  இன்று வரை தொடருகிறது.

துரை என்ற சொல் சமீப காலத்தில் தான் தமிழில் புகுந்துள்ளது என்று பெரும்பாலானோர் கருத்தில் கொண்டுள்ளனர்.ஆனால், நம் அருணகிரியார்  "துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடது தருவாயே."என்று  "வஞ்சம் கொண்டும்" என்ற திருசெந்தூர் பாடலில் வேண்டுகிறார்.திருத்தணி முருகன் துரை முருகன்  என்றே அழைக்கப்படுகிறார்.

நம் படி விழா பெருமானின் திரு உள்ளப்படியும் சிருங்கேரி மஹா சன்னிதானத்தின் அருளாசியுடனும் கடந்த 34ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.இந்த ஆண்டும் அருவமாய் நம்மை வழி நடத்துவார் என்பதில் ஐயமில்லை.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.படி விழாவில் கலந்துகொள்வது நம் கடமை,பாக்கியம்,குருஜிக்கு செலுத்தும் நன்றிக்கடன்,காணிக்கை என்ற உணர்வுடன் அன்பர்கள் முன்னதாகவே வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்...




நம் குருஜி மும்பை படிவிழாவில் 2009ம்  ஆண்டு அன்பர்களை வழி நடத்திச்சென்றதை இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காணலாம்.































வேல் மயில் விருத்தம் (தொடர்ச்சி ) பாடல் 3

                               வேல் மயில் விருத்தம் (தொடர்ச்சி )

                                      வேல் விருத்தம்   பாடல் 3

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 

http://www.kaumaram.com/velvirutham/vv_03.html

கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல

குருஜியின் குரலில்

முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல




                                 மயில்  விருத்தம்  பாடல் 3

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன்



குருஜியின் குரலில்



பாடல்கள் தொடரும்.

Tuesday, 13 January 2015

வேல்மயில்விருத்தம் (தொடர்ச்சி ) பாடல் 2


வேல்மயில்விருத்தம்(தொடர்ச்சி )

                                வேல் விருத்தம்   பாடல் 2

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 


கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல
குருஜியின் குரலில்

முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல


                                 மயில்  விருத்தம்  பாடல் 2

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன்


http://www.kaumaram.com/mayilvirutham/mv_02.html


குருஜியின் குரலில்


முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல

Monday, 12 January 2015

வேல் மயில் விருத்தம் பாடல் 1


                          வேல் மயில் விருத்தம்

முருகா சரணம்   வேல் மயில் விருத்தம் நம் வழிபாடுகளில் பாடப்பட்டு வருகின்றன.ஆனால் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள்தான் நேரமின்மை காரணமாக இடம் பெறுகின்றன.

ஆனால் படி விழாவில் படிகளைக் கடந்து  பெருமான் சந்நிதானத்தில் அமர்ந்து வேல் மயில் விருத்தம் பாடல்கள் முழுவதும் பெருமானின் அபிஷேகம் நிகழும் தருவாயில் நம் அன்பர்களால் இசைக்கப்படுகின்றன. 

படி விழா நெருங்கும் இந்த சமயத்தில் அந்த பாடல்களை ,பதம் பிரித்து பொருளுடன் குருஜியின் குரலில் வழங்க விரும்புகிறோம்.


வேல் விருத்தம்   பாடல் 1 
கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல 

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் l


குருஜியின் குரலில் 

முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல


மயில்  விருத்தம்  பாடல் 1

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 

குருஜியின் குரலில் 


பாடல்கள் தொடரும்.

Saturday, 10 January 2015

திருப்புகழ் அன்பர்களும் "நாத லோலா"வும்

திருப்புகழ் அன்பர்களில் பலர் கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் என்பது  நாம் அறிந்ததே.இந்த இசை ஞானம் தான்  திருப்புகழ் பாடல்களை ராக தாள பாவத்துடன் குறுகிய காலத்தில் கற்று .மெருகு ஏற்றி வழிபாடுகளில் இசைக்க வைத்து  மற்றவர்களையும் மெய்மறக்கசெய்கிறது என்பது மறுக்க முடியாதஉண்மை.அதுமட்டுமல்ல. Both are complementary to each other என்பதையும் நாம் அறிந்ததே.

இதெல்லாம் மனதில் கொண்டு இசை வல்லுனரான குரு திருப்புகழ் பாலசுப்ரமணியம் தலைமையில்  "நாத லோலா " என்ற ஒரு தனி அமைப்பு  Music for Music sake என்ற கொள்கையுடன் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதில் திருப்புகழ் அன்பர்கள், அவர்களின் வாரிசுகள்,இசையில் ஈடுபாடுகொண்ட மற்றவர்கள் யாவரும் ஒருங்கினைந்து செல்பட்டு வருகிறார்கள்.அமைப்பின் குறிக்கோள்கள்.

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை யை  பல அமைப்புகள் நடத்துகின்றன.ஆனால் அந்த மகானின் ஜெயந்திவிழாவை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பூச நட்சத்திர நன்னாளில் பஞ்ச ரத்ன  கீர்த்தனைகளோடு மகானின் மற்ற கீர்த்தனைகளையும்  இசைத்து கொண்டாடுவது. 

அந்த சந்தர்ப்பத்தில் ,இசைக்காக தங்களைஅர்ப்பணித்துக்கொண்டு,இளம் கலைஞர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் கௌரவிப்பது.

திருப்புகழ் அன்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் ஜெயந்தி உத்சவத்தில்  பாட வாய்ப்பளிப்பது வாக்யேககாரர்களின் நினைவு நாளில் விழா நடத்தி அவர்களின் படைப்புகளை பாடுவது. மற்றும் வருங்காலத்தில் சாகித்யம்,சுருதியின் முக்யத்வம்,லயம்,பல்லவி,நிரவல்,சம்ரதாயம்,முதலிய அம்சங்களைப்பற்றி இசை வல்லுனர்களை கொண்டு செயல் முறையில்விளக்குவது,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,சம்ஸ்கிருதம் முதலிய மொழிகளில் அமைந்துள்ள பாடல்களின் பொருளை உணர்த்துவது, வளரும் கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது ,இசை சம்பந்தமான ஒரு சிறிய நூல் நிலையம் அமைப்பது  போன்ற திட்டங்கள் உருவாகிவருகின்றன.

இதன் பிண்ணணியில் இயங்கி வரும்  நாத லோலாவின் கடந்த 4.1.2015 அன்று நடைபெற்ற சிறப்பு  வாய்ந்த ஒரு நிகழ்ச்சி மும்பை செம்பூர் பகுதியில் நடை பெற்றது.

சிறப்பு என்னவென்றால் நம் குரு பாலு சார் இயற்றி இசை வடிவமைத்த   பாடல்கள் அங்கு  அவர் புதல்விகள்  உஷா கோபாலன்  ,சுபா ரகுராமன்,ஜெயந்திசுரேஷ் குரல்களில்  ஒலித்ததுதான்.S.V.ராமசந்திரன் வயலின்.பாலன் மிருதங்கம் வாசிப்பு மிகவும் அனுசரணையாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு மும்பை கர்நாடக இசை பிதாமகர் மரியாதைக்குரிய வைத்யநாத பாகவதர் தலைமை வகித்தார்.பல இசைபிரியர்களும் ,திருப்புகழ் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு அரங்கத்தை நிறைத்தனர்.

சகோதரிகள் உஷா கோபாலன்  சுபா ரகுராமன்,ஜெயந்திசுரேஷ்  வழங்கிய இசை ராக,பாவ பூர்வமாக வெளிப்பட்டது.நிகழ்ச்சிக்காகஅவர்கள்  மேற்கொண்ட கடின உழைப்பையும் ரசிகர்களால்  உணரமுடிந்தது சகோதரிகள் தனித்தனியாக வழங்கிய ராக ஆலாபனை ரசிகர்களின் கரகோஷத்துடன் பாராட்டை பெற்றது.பெற்றோர்களிடமிருந்து கிரகித்த இசைஞானம்  "குல வித்தை கல்லாமல் பாகம் பெறும்" என்ற பழமொழியை மெய்யாக்கியது.இடம் பெற்ற பெரும்பாலான  பாடல்கள் தமிழிலும்,,மந்தாரி,ஹம்ச வினோதினி,சமுத்ரப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.மொத்தத்தில் நிகழ்ச்சி யாவருக்கும் மன நிறைவை அளித்தது என்பதில் ஐயமில்லை.


நிகழ்ச்சியின் முடிவில் திருப்புகழ் மணி சார் பக்க வாத்ய கலைஞர்களையும்,நிகழ்ச்சி அமைப்புக்கு தூண்டுதலாகவும்,உறு துணையாகவும் இருந்த வைக்கம் மணி பாகவதரையும் கௌரவித்தார்.

நாத லோலா  அமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சி ஒர் ஆரம்பம் என்றும் மேலும் பல நிகழ்சிகளை நாம்  அடிக்கடி  எதிர் பார்க்கலாம் என்று பெருமையுடன் கூறினார்கள்.காத்திருப்போம்.

நிகழ்ச்சியின் சில காட்சிகள் புகைப்பட வடிவில்: