Saturday, 10 January 2015

திருப்புகழ் அன்பர்களும் "நாத லோலா"வும்

திருப்புகழ் அன்பர்களில் பலர் கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் என்பது  நாம் அறிந்ததே.இந்த இசை ஞானம் தான்  திருப்புகழ் பாடல்களை ராக தாள பாவத்துடன் குறுகிய காலத்தில் கற்று .மெருகு ஏற்றி வழிபாடுகளில் இசைக்க வைத்து  மற்றவர்களையும் மெய்மறக்கசெய்கிறது என்பது மறுக்க முடியாதஉண்மை.அதுமட்டுமல்ல. Both are complementary to each other என்பதையும் நாம் அறிந்ததே.

இதெல்லாம் மனதில் கொண்டு இசை வல்லுனரான குரு திருப்புகழ் பாலசுப்ரமணியம் தலைமையில்  "நாத லோலா " என்ற ஒரு தனி அமைப்பு  Music for Music sake என்ற கொள்கையுடன் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதில் திருப்புகழ் அன்பர்கள், அவர்களின் வாரிசுகள்,இசையில் ஈடுபாடுகொண்ட மற்றவர்கள் யாவரும் ஒருங்கினைந்து செல்பட்டு வருகிறார்கள்.அமைப்பின் குறிக்கோள்கள்.

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை யை  பல அமைப்புகள் நடத்துகின்றன.ஆனால் அந்த மகானின் ஜெயந்திவிழாவை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பூச நட்சத்திர நன்னாளில் பஞ்ச ரத்ன  கீர்த்தனைகளோடு மகானின் மற்ற கீர்த்தனைகளையும்  இசைத்து கொண்டாடுவது. 

அந்த சந்தர்ப்பத்தில் ,இசைக்காக தங்களைஅர்ப்பணித்துக்கொண்டு,இளம் கலைஞர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் கௌரவிப்பது.

திருப்புகழ் அன்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் ஜெயந்தி உத்சவத்தில்  பாட வாய்ப்பளிப்பது வாக்யேககாரர்களின் நினைவு நாளில் விழா நடத்தி அவர்களின் படைப்புகளை பாடுவது. மற்றும் வருங்காலத்தில் சாகித்யம்,சுருதியின் முக்யத்வம்,லயம்,பல்லவி,நிரவல்,சம்ரதாயம்,முதலிய அம்சங்களைப்பற்றி இசை வல்லுனர்களை கொண்டு செயல் முறையில்விளக்குவது,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,சம்ஸ்கிருதம் முதலிய மொழிகளில் அமைந்துள்ள பாடல்களின் பொருளை உணர்த்துவது, வளரும் கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது ,இசை சம்பந்தமான ஒரு சிறிய நூல் நிலையம் அமைப்பது  போன்ற திட்டங்கள் உருவாகிவருகின்றன.

இதன் பிண்ணணியில் இயங்கி வரும்  நாத லோலாவின் கடந்த 4.1.2015 அன்று நடைபெற்ற சிறப்பு  வாய்ந்த ஒரு நிகழ்ச்சி மும்பை செம்பூர் பகுதியில் நடை பெற்றது.

சிறப்பு என்னவென்றால் நம் குரு பாலு சார் இயற்றி இசை வடிவமைத்த   பாடல்கள் அங்கு  அவர் புதல்விகள்  உஷா கோபாலன்  ,சுபா ரகுராமன்,ஜெயந்திசுரேஷ் குரல்களில்  ஒலித்ததுதான்.S.V.ராமசந்திரன் வயலின்.பாலன் மிருதங்கம் வாசிப்பு மிகவும் அனுசரணையாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு மும்பை கர்நாடக இசை பிதாமகர் மரியாதைக்குரிய வைத்யநாத பாகவதர் தலைமை வகித்தார்.பல இசைபிரியர்களும் ,திருப்புகழ் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு அரங்கத்தை நிறைத்தனர்.

சகோதரிகள் உஷா கோபாலன்  சுபா ரகுராமன்,ஜெயந்திசுரேஷ்  வழங்கிய இசை ராக,பாவ பூர்வமாக வெளிப்பட்டது.நிகழ்ச்சிக்காகஅவர்கள்  மேற்கொண்ட கடின உழைப்பையும் ரசிகர்களால்  உணரமுடிந்தது சகோதரிகள் தனித்தனியாக வழங்கிய ராக ஆலாபனை ரசிகர்களின் கரகோஷத்துடன் பாராட்டை பெற்றது.பெற்றோர்களிடமிருந்து கிரகித்த இசைஞானம்  "குல வித்தை கல்லாமல் பாகம் பெறும்" என்ற பழமொழியை மெய்யாக்கியது.இடம் பெற்ற பெரும்பாலான  பாடல்கள் தமிழிலும்,,மந்தாரி,ஹம்ச வினோதினி,சமுத்ரப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.மொத்தத்தில் நிகழ்ச்சி யாவருக்கும் மன நிறைவை அளித்தது என்பதில் ஐயமில்லை.


நிகழ்ச்சியின் முடிவில் திருப்புகழ் மணி சார் பக்க வாத்ய கலைஞர்களையும்,நிகழ்ச்சி அமைப்புக்கு தூண்டுதலாகவும்,உறு துணையாகவும் இருந்த வைக்கம் மணி பாகவதரையும் கௌரவித்தார்.

நாத லோலா  அமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சி ஒர் ஆரம்பம் என்றும் மேலும் பல நிகழ்சிகளை நாம்  அடிக்கடி  எதிர் பார்க்கலாம் என்று பெருமையுடன் கூறினார்கள்.காத்திருப்போம்.

நிகழ்ச்சியின் சில காட்சிகள் புகைப்பட வடிவில்:



No comments:

Post a Comment