மும்பை படி விழா நிறைவு
மும்பை யின் 39 ம் படி விழா சீரும் சிறப்புடன் நடந்தேறியது.கடும் குளிரையும் பொருட்படுத்தாது மும்பையின் பல பகுதிகளிலிருந்து அன்பர்கள் விழா துவக்க முதலிலிருந்தே பெருமளவில் குவிந்தனர்.
பெங்களூரு அன்பர் ஸ்ரீனிவாசன் அவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சிக்கு கூறிய விஷயம்.
அன்பர்கள் குரு பாலு சார், துணைவி ராஜி மாமிஅவர்களை ஆலய முகப்பில் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
பாலு சார் அருணகிரிநாதர் ஸ்வாமியை வணங்கி ஆசிகள் பெற்றார்
படி பூஜையுடன் படி விழா தொடங்கியது.
விநாயகர் ஸ்துதி,குருஸ்துதி யுடன் திருப்புகழ் பாக்கள் ,கந்தர் அனுபூதி இசைத்து அன்பர்கள் திருப்படிகளை கடக்கும் காட்சிகள்
108 பாக்களுடன் திருப்படிகளை கடந்த பின் திருசெம்பூர் திருக்கோயில் மூலவர் தரிசனம்
அன்பர்கள் திருப்படிகளை துதித்து இசைத்த சில பாடல்கள்
"பாலோ தேனோ " நீலாம்பரி ராகம்
விருத்தம் : மும்பை குரு ராஜி மாமி பாலு சார்
"சரவணபவநிதி " பிருந்தாவன சாரங்கா ராகம்
விருத்தம் :மும்பை குரு ராஜி மாமி
"அறிவழிய மயல் பெருக" காம்போதி ராகம்
விருத்தம் "மும்பை அன்பர் நாராயணன்
"ஒருவரை யொருவர் " ஹிந்தோளம் ராகம்
விருத்தம் :மும்பை அன்பர் ராஜாமணி/பாலு சார்
"தொக்கறாக் குடில் " சுப பந்துவரளி ராகம்
விருத்தம் : பெங்களூரு அன்பர் ஸ்ரீனிவாசன்
"ஆதி மகமாயி யம்பை " ஹம்சாநந்தி ராகம்
விருத்தம்; மும்பை அன்பர் நித்யா கணேஷ்
"அண்டர்பதி குடியேற " சிந்துபைரவி ராகம்
விருத்தம் :மும்பை அன்பர் செல்லா ராஜாமணி மாமி
"அல்லி விழியாலும் " தர்பாரி கானடா ராகம்
விருத்தம் :மும்பை அன்பர் சரஸ்வதி மாமி
ஆலய மரியாதை
மணி மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு வேத கோஷங்களுடன் அன்பர்கள் வேல்/மயில் விருத்தம் பாடல்களுடன் மஹா அபிஷேகம் நடை பெற்ற வைபவம்.
பல ஸ்ருதியாக மயில் விருத்தம்
அலங்காரங்களுடன் காட்சியளித்து பக்தர்களை பரவசப் படுத்திய பெருமான்
மந்த்ர புஷ்பங்கள் வேத கோஷத்துடன் படி விழா வைபவம் இனிதே நிறைவடைந்தது,
அன்பர்கள் பெருமான் அருள் பெற்று மன நிறைவுடன் விடை பெற்றனர் முருகா சரணம்