அமுத திருப்புகழ் பாடல்கள் 503
செந்தில் ஆண்டவன் நமக்கு தெய்வீக இசையுடன் குருஜி வாயிலாக நமக்கு வழங்கியுள்ள அருணகிரியாரின் 503 திருப்புகழ் பாடல்களை திருவாசகம் முற்றோதல் என்ற வகையின்படி சென்னையில் சென்ற ஆண்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் ,அன்பர்களும் முழுமையாக சமர்ப்பித்து ஒரு சரித்திர நிகழ்வை நிலை நாட்டினர்.
அது ஒரு மன நிறைவுடன் முடிந்த வைபவம்.ஆனால் நம் அன்பர்களுக்கு முடிவு என்பது ஒரு ஸம்ப்ரதாயந்தான்.முடிவிலிருந்து மற்றொன்று துவங்கும் என்ற வாக்கின்படி குருஜியிடம் 1963 முதல் 55 ஆண்டுகள் பயின்று எண்ணற்ற வழிபாடுகளைநிகழ்த்தி இன்றளவும் குருஜியின் சீடராக தன்னை சமர்ப்பித்து அரும்பணி ஆற்றி திருப்புகழ் மணியை தம் பெயரிலேயே கொண்டுள்ள அருளாளர் என் .எஸ் .மணி சார் நம் வருங்கால சந்ததியினர் நம் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு,ஈடுபட்டு குருஜியின் வழியில் திருப்புகழ் பாடல்களை நன்கு கற்று குருவருளையும் ,திருவருளையும் பெற குருஜி கையாண்டுள்ள 503 திருப்புகழ் பாடல்கள் ,51 கந்தர் அனுபூதி,31 வேல்,மயில்,சேவல் விருத்தங்கள்,12 திரு வகுப்புகள் முதலிய படைப்புகளை 28 மணி நேர அளவில் இசைத்து UTUBE வடிவில் அமைத்து அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
அன்பர்கள் வசதிக்காக 13 பகுதிகளாக வழங்கியுள்ளார்கள். .
நம் அமைப்பின் மணி விழா நெருங்கும் இத்தருணத்தில் இந்த அரிய சேவையை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக பெருமைப் படுகிறோம்.இதுவும் நம் இயக்கத்தின் சரித்திரத்தில் மற்றொரு மைல்கல் என்று கருதுகிறோம்.
UTUBE பற்றிய விபரங்கலும் அதன் குறியிட்டுகளும் கீழே
1...50
51..100
101..150
151...200
201..250
251..300
301..350
351..400
வேல்/மயில் விருத்தங்கள்
வகுப்புகள்
அன்பர்களுக்கு தாழ்வான வேண்டுகோள்.
குருஜியின் படைப்புக்கள் நம் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது.அந்த மனோ பாவத்தில் மற்ற UTUBE க் களுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது போல் .இந்த UTUBE க்களுக்கு எந்த விதமான கருத்துக்களையும் அளிக்கவேண்டாம் என்று மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
குருஜியின் படைப்புகளை நன்கு கற்றும் ,வழிபாடுகளில் கலந்துகொண்டும் ,நம் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தியும் மணிசாருக்கு நம் நன்றிகடன்களை என்றென்றும் செலுத்துவோம் .திருப்புகழ் கடலிலிருந்து அமுதை பருகுவோம்.
மற்றும் மணி விழா வைபவத்தில் இடம் பெறும் பாடல்களின் பட்டியல்.
முருகா சரணம்
No comments:
Post a Comment