திருப்புகழ் அன்பர்கள் மணி விழா வைபவம் நிறைவு ...........பகுதி 1
வழிபாடுகளில் விருத்தங்களினாலும் ,திருப்புகழ் பாடல்களினாலும் அன்பர்களை முருகன் சந்நிதானத்துக்கே இட்டு செல்லும் ஓர் அன்பர் நம்மிடம் " நான் வீட்டில் என்னதான் முயன்று பாடினாலும் அமைவதில்லை.திருப்தி இல்லை. ஆனால் வழிபாட்டில் கலந்துகொண்டு பாடும் போதுதான் அந்த அனுபவம் கிடைக்கிறது" என்று கூறுவது உண்டு.அவர் மட்டுமல்ல.மற்ற அன்பர்களின் வெளிப்பாடும் அது தான் .காரணம் சத் சங்கம்.தான்.
அருணகிரிநாதர். "சத்சங்கததின் பரிபூரண விளக்கம் அடியார்கள் தான். அவர்களுடன் சேரந்து விட்டால் முருகன் மனம் கனிந்து அருள் புரிகிறான் ஒவ்வொருவர் மேலும் அருட் கண் பார்வை வீசுகிறான்,
பார்ப்பாயலையோ அடியாரொடு சேர்ப்பாயலையோ " என அடியார் குழாத்துடன் இணைந்து கொள்ள ஏங்குகிறார்
அன்பர்கள் நடுவில் முருகன் ப்ரத்யட்சமாய் இருக்கிறான் என்பதால் தான் அப்படியொரு அப்பழுக்கில்லா அன்பர்கள் இயக்கம் உருவாக்க குருஜி அவர்கள் அரும் பாடு பட்டார்கள் .
இது கலிகாலம். ஈரம் வற்றிப் போய்க் கனல் வீசும் பாலை நிலம். அந்த வெம்மையில் துடிக்கும் மனித குலம். அது கண்டு தவித்த குருஜியின் உயர்ந்த உள்ளம். துயரங்களைப் போக்கும் அருமருந்து திருமுருகனின் திருப்புகழ் தான் என்று காட்டத் தான் இசை வழிபாடு .இந்த வழிபாடு இதயத்தில் நேரான , சீரான தாக்கத்தை ஏற்படுத்தி நெஞ்சங்களுக்கு நிம்மதி தருகிறது. Uடி விழாக்கள் படிப்படியாக நம்மை முருகனின் அருகே அருகே அழைத்துச் செல்வது போன்ற சிலிர்ப்பு . அருணகிரிநாதர் விழாக்களில், விழிநீர் பெருக்க வைக்கும் அடுக்கடுக்கான ஆனந்த நிலைகள். நாளுக்கு நாள் இயக்கத்தில் சேரும் அன்பர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்தது. பூர்வ பட்சிம உத்தர தட்சிண திசைகளை நோக்கியும், கடல் கடந்தும் தன் வலிய சிறகுகளை விரித்துப் பறந்தது. ஆங்காங்கே தடம் Uதித்து மாந்தரைப் புடம் போட்டது.
ஒவ்வொரு திருப்புகழ் மையமும் தனித் தனி தீவாக இல்லாமல் இணைந்து கொள்ளும் பொழுது ஆன்மீக பலம் Uன்மடங்காகிறது என்பதை குருஜி அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். அன்பு தான் அங்கே பேசும் மொழி. பக்திதான் நடக்கும் வழி. அவரவர் திறமை எலலாம் முருகனுக்கே அர்ப்பணம் என்ற மனோ பாவம் .சத்சங்கத்தில் தொடர் மின்கலங்களின் இணைப்புப் போல் ,தயாகமும் த்யானமும் மற்ற நல் உணர்வுகளும் ஒவ்வொருவருக்கும் கிடைத்து விடுகிறது. கூட்டுப் பிரார்த்தனை நலிந்த உள்ளங்களுக்கு , உடல்களுக்கு நம்பிக்கை தந்து நலம் சேர்க்கிறது. குமுறும் எரிமலையாய் கொந்தளிக்கும் கடலாய்ப் பொங்கும் மனித சமுதாயம் அமைதிப் பூங்காவாய் மாற, குருஜி அவர்கள் போட்டுத் தந்த ராஜபாட்டை அது.
அதை மனதில் கொண்டுதான் நம் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய மகா சத் சங்கத்தை ஒவ்வொரு தலத்தில் ஏற்பாடு செய்து வாழையடி வாழையாக வந்த அன்பர் கூட்டத்தை ஒருங்கிணைத்து , அன்பர்களை ஒருநிலைப்படுத்தி ,பெருமானுடன் உறவாடியபின் ஆத்ம திருப்தியுடன் அன்பர்களை வழி அனுப்பி வைக்கிறது.அவ்வாறு அறுபது ஆண்டுகள் கடந்து விட்டன .
இந்த ஆண்டு அத்தகைய திருப்புகழ் அன்பர்களின் சங்கங்களை,சங்கங்களின் சங்கமத்தை குருஜிதன்னை அர்ப்பணித்து எண்ணற்ற பல அன்பர்களை உருவாக்கிய தலைமைப் பீடமான புது தில்லியில் கொண்டாடியது சால ப் பொருத்தமே.
அந்த புனித நன்னாள் எப்போது வரும் என்று நாளை எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மிகப் பலர்.
வாதம் பித்தமிடா வயிறீளைகள் சீதம் பற்சனி சூலை குளிர்காசம் மாறுங் கக்கலொடே சில நோய்பிணி முதலிய உடல் உபாதைகளை உதறித் தள்ளினார்கள்.விரைந்தார்கள். பறந்தார்கள். தலமைப்பீட அரங்கை அடைந்தார்கள்.மற்ற அன்பர்களோடு கலந்தார்கள்.ஒன்றினார்கள்.
வாதம் பித்தமிடா வயிறீளைகள் சீதம் பற்சனி சூலை குளிர்காசம் மாறுங் கக்கலொடே சில நோய்பிணி முதலிய உடல் உபாதைகளை உதறித் தள்ளினார்கள்.விரைந்தார்கள்.
அத்தகைய அன்பர்களில் ஒருவரான மூத்த அன்பர் பெங்களூரு வசந்தா பஞ்சாபகேசன் வைபவ நிகழ்ச்சிகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
"திருப்புகழ் என்னும் மகா மந்திரத்தை சென்ற நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உபதேசித்து அவர்களை திருப்புகழ் அன்பர்களாக மாற்றிய அற்புதம் துவங்கி இந்த ஆண்டு 2018ல் அறுபது ஆண்டுகள் முடிகின்றன. அருணகிரிநாதரின் மறு அவதாரம் என்று கொண்டாடப்படும் குருஜி ராகவன் அவர்கள் திருப்புகழை ஆதாரமாகக் கொண்டு ஜாதி குலம் இன்றி ஆண் பெண் பேதம் அற ஷடாக்ஷரத்தை அறிய வைத்த இயக்கத்தின் மணிவிழா புதுடெல்லியில் சங்கர வித்யாலயா கேந்திர வளாகத்தில் செப்டம்பர் 8 9 தேதிகளில் நடைபெற்றது. புவியின் பூர்வ பச்சிம தக்ஷின உத்தர திக்குகளிலிருந்து அன்பர்கள் கலந்து கொண்ட அற்புதத் திருவிழா.
8 9 2018 அன்று காலை விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருப்புகழின் மூத்த அன்பர் திருநீலகண்டன் தம்பதியருடன் குருஜியின் மகன் திரு ராஜு அன்பர்களின் நன்மைக்கு சங்கல்பம் செய்து கொண்டு ஹோமம் நடந்தேறியது.
ஒளி /ஒலி வடிவில்
காலை சிற்றுண்டிக்கு பின் அபிராமி அந்தாதிமற்றும் பதிகம் இரண்டும் மாதர் அன்பர்களால் துதிக்கப்பட்டது
மணி விழா குத்து விளக்கேற்றி துவங்கப்பட்டது. மூத்த அன்பர்கள் கடவுள் வணக்கத்திற்கு பின் அன்பர் திரு ஜிக்கிமாமா இயற்றிய குரு வந்தனம் எல்லோராலும் பாடப்பட்டது.
விழாவை துவக்கி வைத்த திருப்புகழ் அன்பர்கள்அமைப்பின் தலைவர் திரு கே. என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திருப்புகழ் இசை வழிபாடு முறையை அதன் சிறப்பை பகிர்ந்தார். பழனி வகுப்பு பாடி முருகேசனே வரவேணுமே என்னும் போது முருகனே நேரில் வருவார் என்று நெகிழ்ந்தார்.
செயலர் திரு. நாகேஷ் உரையாற்றும்போது திருப்புகழ் இசை வழிபாடு புத்தகம் கிட்டத்தட்ட 40,000 அன்பர்களிடம் சேர்ந்து உள்ளதுஎன்றார்.
இசை வழிபாட்டு முறையை தமிழ் மட்டுமல்ல மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் கற்று வருகிறார்கள். ஆன்மீக பெருவிழாவின் போது கன்னட புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த மணிவிழாவில் தெலுங்குப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் திருப்புகழ் வகுப்புகள் நடத்தி அன்பர்களை இசை வழிபாட்டில் ஈடுபடுத்திய திருமதி சரஸ்வதி மாமி வழியில் திருமதி லக்ஷ்மி வெங்கட்ராமன் தம்பதியர் தெலுங்குப் பதிப்பு வெளிவருவதில் முழு முயற்சி எடுத்துள்ளனர் .தெலுங்கு பதிப்பின் முதல் புத்தகத்தை வெளியிட்ட திரு கே என் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமிருந்து முதல் பிரதியை திருமதி லக்ஷ்மி வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார்.
தொடரும்
முருகா சரணம்