திருப்புகழ் சங்கமம் சென்னையில்
(ஏப்ரல் 22&23 நாட்களில்)
குரு சமர்ப்பண திருப்புகழ் இசை விழா
503 பாடல்கள் சமர்ப்பணம்
முதல் நாள்
விநாயகர் பூஜையுடன் வைபவம் தொடங்கியது.
நிகழ்ச்சி நிரலில் பல குழுக்கள் அமைக்கப் பட்டிருந்தது ஒரு புதுமைதான். மரபுக்கு மாறாக , சில நடை முறை காரணங்களுக்காகவும்,பல ஆசிரியர்களையும்,பல பாகங்களிலிருந்து வந்துள்ள அன்பர்களை கௌரவிக்கும் பொருட்டும், நேரம் கருதியும் இந்த ஏற்பாடு என்று உணர முடிந்தது.இருப்பினும் ஒலித்தது என்னவோ ஒரே குரலில் தான்.
பொதுவாக பெண்களுக்குத்தான் முதலிடம்.ஆனால் இங்கு ஆண்களுக்கு முதலிடம் அளித்து இசையை துவங்க வைத்ததும் புதுமைதான்.
வழிபாடுகளில் குருஜி தொடங்குமுன் அன்பர்களை நோக்கி ,சுற்றி குறும் சிரிப்புடன் அருள் பார்வையை வீசுவார்.அன்பர்கள் இனம் புரியாத பரவசம் அடைவார்கள்.நடுவில் அன்பர்கள் பெருமானுடன் இசையில் லயிக்கும்போது அவர் திரு முகத்தில் ஒளிவிடும் பிரகாசத்துக்கு அளவே இல்லை.இன்று அந்த மஹானை அருவமாக தரிசித்தோம்.கண்களில் நீர் கசிந்தது.
விநாயகர் துதியுடனும்,குரு வந்தனத்துடன் தொடங்கி திருச்செந்தூர் வரை ஒரே மூச்சில் பாடல்களை விரைவில் முடித்தனர்.தொடர்ந்து குழுக்கள் அதே வேகத்தில் இசைத்து பாடல்கள் முழுவதையும் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே நிறைவு செய்தது பெருமானின் அருள்தான் .
கிடைத்துள்ள சில வீடியோக்களை பதிவு செயகிறேன்.அருளாளர் மாலதி ஜெயராமன் கைவண்ணத்தில் விரைவில் வெளிவரவுள்ள வீடியோக்களுக்காக காத்திருப்போம்.
திருப்புகழ் வைபவத்துக்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்தது காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் விஜயமும் ,அருளாசி வழங்கியதும்தான்.
காஞ்சி மடத்துக்கும் அன்பர்களுக்கும் பல ஆண்டுகளாவே நெருங்கிய தொடர்பு உண்டு செப்டம்பர் 2010 ல் காஞ்சிபுரம் மடத்தில் குருஜியின் தலைமையில் வழிபாடு நடைபெற்றது.அந்த வைபவத்தை ஓர் அன்பர் ஒளி/ஒலி வடிவில் வழங்கியுள்ளார்.
பின்னர் ஆண்டுதோறும் அன்பர்கள் வழிபாடு நடத்திவருகிறார்கள்..2016 ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிமடம் விஜயவாடாவில் முகாமிட்டிருந்தபோது அன்பர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்தினர்.இப்பழுதும் சென்னை முகாமில் வழிபாடு நடத்தவுள்ளார்கள் .இந்நிலையில் காஞ்சி பெரியவர் நம் வைபவத்துக்கு விஜயம் செய்தது நம் பெரும் பாக்கியம்.
நாம் ,மற்ற ஆன்மீகம் போன்ற நிகழ்ச்சிகளில் ,இடையே யாராவது பெரியவர்கள் வந்தால் கூட்டத்தினர் உடன் ஆரவாரம் செய்வதை , .பிறரைத்தாண்டி ஒரு அவசியமும் இல்லாமல் ஓடுவதை ,அது நாம் இறைவனுக்கு செய்யும் அபசாரம் என்று கூட அறியாமல் நடந்து கொள்வதை பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கண்டு வருகிறோம்..
ஆனால் இங்கு .ஸ்வாமிகள் விஜயம் செய்யும்போது ஆரவா ரமில்லை.அன்பர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்திருக்கவில்லை. ஸ்வாமிகள் வந்தவுடன் பாட்டை நிறுத்தவில்லை பாடல்களை நிறுத்தவில்லை. நம் குருஜி நமக்கு உபதேசம் செய்துள்ள கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற கொள்கைகளை,நன்னெறிகளை எப்படி அன்பர்கள் கடைபிடிக்கிறார்கள் என்று நாம் பெருமைபடைத்தான் வேண்டும்..குருஜி புன்னகையுடன் தோன்றினார்..
தொடர்ந்த பாடல்களை ஸ்வாமிகளும் அனுபவித்து கேட்டார்கள்.சில பாடல்களுக்குப்பின் தன் அருளுரையை தொடர்ந்தார்.நம் குருஜியைப் பற்றியும் ,நம் இயக்கத்தைப் பற்றியும் சிலாகித்து பேசினார்.பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர்.விஞ்ஞானம் போன்றவைகளோடு திருப்புகழ் போன்ற ஆன் மீக விஷயங்களிலும் ஈடுபடுத்தவேண்டும் என்கிறார்.
தொடரும்
மும்பை வெங்கட்ராமன்.
No comments:
Post a Comment