குரு மஹிமை இசை சங்கராபரணம் ராகம்
திருப்பரங்குன்றம் திருத்தலம்
"துடிகொணோய்களோடு " என்று தொடங்கும் பாடல்
"காலனிடத்தில் " என்று தொடங்கும் பாடல்
திருச்செங்கோடு திருத்தலம்
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடிஎனவும்பெயர்பெற்றது. சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது
இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். காவிரியின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும்,காவிரியின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்[கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.
திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும்நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- ஈரோட்டையும் ஆத்தூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது.
- திருச்செங்கோட்டையும் நாமக்கலையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது.
- பரமத்தியையும் சங்ககிரியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.
மற்ற தகவல்
http://temple.dinamalar.com/
ஆலயத்தின் உட் பகுதி காட்சிகள்
"காதி மோதி வாதாடு " என்று தொடங்கும்பொதுப்பாடல்
"சிவனார் மனம்குளிர " என்று தொடங்கும் பாடல்
பழநி திருத்தலம்
"ஊனெரெலும்பு " என்று தொடங்கும் பொதுப் பாடல்
"மாண்டாரெலும்பணியும் " என்று தொடங்கும் பொதுப் பாடல்
"புனமடந்தை " என்று தொடங்கும் பாடல்
காஞ்சிபுரம் திருத்தலம்
"விடுங்கை " என்று தொடங்கும் பாடல்
சிதம்பரம் திருத்தலம்
https://www.youtube.com/watch?
முருகா சரணம்
சகல சங்கடங்களையும் களையும் சங்கராபரணம் ராகப் பாடல்கள் ! திருச்செங்கோடு திருத்தலக் குறிப்பு அன்பர்களுக்கு பயன்படும்; ஆலயத்தின் உட் பகுதி காட்சிகள் கண்களுக்கும், அருளாளர் சித்ரா மூர்த்தியின் இசைப் பேருரை செவிகளுக்கும் இனிய விருந்து!
ReplyDelete