Friday, 30 January 2015

அருணகிரிநாதரின் திருவகுப்பு



FRIDAY, 30 JANUARY 2015




                                 அருணகிரிநாதரின் திருவகுப்பு

தமிழ் இலக்கியத்தில் பாடல்கள்,கவிதைகள்,செய்யுள் ,துதிப்பாடல்கள் முதலியன
 பிரபந்தம் என்று அழைக்கப்படும் 96 வகை  செய்யுள் வகை பாடல்களின்
தொகுப்பில் அமைந்துள்ளன.பிரபந்தம் என்றால் பொதுவாக ‘இசையோடு கூடியது’
என்று பொருள்.

"சந்த பந்த முந்து விஞ்சை செஞ்சொலிற் பிரபந்த நந்து சங்க மங்கலம்
பொருந்து தமிழ் பாடியே’"


என்ற – அருணகிரியாரின்  பாடல் மூலமாக  அறியலாம்.

பிரபந்தத்தின் பட்டியலைப் பார்ப்போம்


1) சாதகம்2) பிள்ளைக்கவி3) பரணி4) கலம்பகம்5) அகப்பொருள் கோவை
6) ஐந்திணைச் செய்யுள்7) வருக்கக் கோவை8) மும்மணிக் கோவை9) அங்க மாலை
10) அத்தமங்கலம்: அட்டமங்கலம்11) அணுராக மாலை: அநுராக மாலை
12) இரட்டை மணிமாலை13) இணைமணி மாலை14) நவமணி மாலை
15) நான்மணி மாலை: பாரதியின் விநாயக நான்மணிமாலை எடுத்துக்காட்டு.
16) நாம மாலை17) பல்சந்த மாலை18) பன்மணி மாலை19 மணி மாலை
20) புகழ்ச்சி மாலை21) பெருமகிழ்ச்சி மாலை22) வருக்க மாலை
23) மெய்கீர்த்தி மாலை: மெய்க்கீர்த்தி மாலை24) காப்பு மாலை
25) வேணிண் மாலை: வேனின் மாலை (வேனில் மாலை)
26) வசந்த மாலை27) தாரகை மாலை28) உற்பவ மாலை29) தாணை மாலை
30) மும்மணி மாலை: (வள்ளுவ மும்மணி மாலை )
31) தந்தக மாலை: தண்டக மாலை32) வீரவெற்சி மாலை: வீர வெட்சி மாலை
33) வெற்றிக் கரந்தை மஞ்சரி
34) போர்க்கெழு வஞ்சி :( போர்க்கு எழு வஞ்சி என்று பிரித்தால் புரியும்.)
35) வரலாற்று வஞ்சி36) செருக்கள வஞ்சி37) காஞ்சி மாலை: 38) நொச்சி மாலை
39) உள்ளிணை மாலை: உழிஞை மாலை.40) தும்பை மாலை41) வாகை மாலை
42) ஆடோரண மஞ்சரி: வரதோரண மஞ்சரி43) எண் செய்யுள்தொகை நிலைச் செய்யுள்
45) ஒலியல் அந்தாதி46) பதிற்றந்தாதி47) நூற்றந்தாதி48) உலா49) உலாமடல்50) வளமடல்
51) ஒரு பா ஒரு பக்து: 
52) இரு பா இரு பக்து: இருபா இரு ப·து. ஒருபது, இருபது என்றும் சொல்லலாம்.
53) ஆற்றுப் படை: (திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை என்று சங்க காலத்தில் தொடங்கி எங்க காலம் வரை
ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.)
54) கண்படை நிலை55) துயில் எடை நிலை:56) பெயர் இன்னிசை57) ஊர் இன்னிசை 
58) பெயர் நேரிசை59) ஊர் நேரிசை60) ஊர் வெண்பா61) விளக்கு நிலை:62) புற நிலை
63) கடை நிலை64) கையறு நிலை65) தசாங்கப் பத்து66) தசாங்கட்டியல்:
67) அரசன் விருத்தம்68) நயனப் பாட்டு: நயனப் பத்து.69) பயோதரப் பாட்டு: 
70) பாதாதி கேசம்
71) கேச, கேசாதி பாதம்: கேசாதி பாதம் (மனோன்மணீயத்துல ஒரு கேசாதி பாதம்
வருது. எட்பூ ஏசிய நாசியாய் என்று ஓரிடம் வரும்.)
72) அலங்கார பணிசகம்: அலங்கார பஞ்சகம்73) கைக்கிளை74) மங்கல வெள்ளை
75) தூது76) நாற்பது77) குலமகன்: குழமகன்
78) தாண்டகம்:( திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம்)79) பதிகம்80) சதகம்
81) செவியறிவிரூ: செவியறிஉறூஉ82) வாயுறை வாழ்த்து83) புற நிலை வாழ்த்து
84) பவணிக் காதல்: பவனிக் காதல்85) குறத்திப் பாட்டு86) உளத்திப் பாட்டு: உழத்திப் பாட்டு 
87) ஊசல் 88) எழு, கூற்றிருக்கை: ( திருவெழுகூற்றிருக்கை )89) கடிகை வெண்பா90) சிண்ணப்பூ: சின்னப் பூ (சின்னங்களைக் குறித்தது. சின்னது இல்லை.)91)  விருத்த இலக்கணம் 92) முது காஞ்சி93) இயன்மொழி வாழ்த்து 94) பெருமங்கலம் 95) பெருங்காப்பியம் 96) சிறுகாப்பியம்:


அருணகிரியாரின்  பாடல்கள் மேற்கூறிய சில அமைப்புகளில் உள்ளன. தற்போதைக்கு
வகுப்பு பற்றி பார்ப்போம்.

ஒரே பொருளை பலவிதமாக வகுத்து, தொகுத்து சொல்லும் நூலுக்கு வகுப்பு என்று
பெயர்.அருணகிரியார் இவ்வகையில் 25திரு  வகுப்புகள் பாடிஅருளியுள்ளார்
ஆனால் அவைகளில் 18 வகுப்புகள் தான் அருணகியாருடையது, மற்ற பாடல்கள்
இடைச்செருகல் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

திருவகுப்பு - பட்டியல்



 1. சீர்பாத வகுப்பு2. தேவேந்திர சங்க வகுப்பு3. வேல் வகுப்பு4. திருவேளைக்காரன் வகுப்பு

5. பெருத்த வசன வகுப்பு6. பூத வேதாள வகுப்பு7. பொருகளத் தலகை வகுப்பு

8. செருக்களத் தலகை வகுப்பு9. போர்க்களத் தலகை வகுப்பு10. திருஞான வேழ வகுப்பு

11. திருக்கையில் வழக்க வகுப்பு12. வேடிச்சி காவலன் வகுப்பு13. சேவகன் வகுப்பு

14. வேல்வாங்கு வகுப்பு15. புய வகுப்பு16. சித்து வகுப்பு17. கடைக்கணியல் வகுப்பு

18. சிவலோக வகுப்பு19. மயில் வகுப்பு20. கொலு வகுப்பு21. வீரவாள் வகுப்பு

22. சிவகிரி வகுப்பு23. திருச்செந்தில் வகுப்பு24. திருப்பழநி வகுப்பு

25. திருப்பரங்கிரி வகுப்பு

திருவகுப்பின் சிறப்புகள்.

அருணகிரியாரின் மற்ற பாடல்களில் இடம் பெற்றுள்ள பெண்ணாசை,வர்ணனை,யம பயம்
முதலியவை இடம் பெற வில்லை.

பெருமானின் திருப்பாதங்கள் பக்தர்கள் ,வேலாயுதம்,பன்னிரு
தோள்கள்,திருக்கரங்கள்,கருணை பொழியும் விழிகள் அருட்பார்வை,குறமாதை
,திருப்புகழ் பற்றி தான் இடம் பெற்றுள்ளன.

அருணகிரிநாதரின் மறு பிறவியாக கருதப்படும் கிளி ரூபத்தில் தான் அவர் பாடி அருளினார்


இதை அவர் பாடல்மூலமாகவே ,ஆதார பூர்வமாக ,அருளாளர் திருப்புகழ் அடிமை
நடராஜன் தன்முன்னுரையில் அளித்துள்ளார


http://www.kaumaram.com/vaguppu/vgp00.html

திரு வகுப்புகளில் நம் குருஜி  12 பாடல்களை வழிபாட்டு நிகழ்சிகளுக்காக
இசையுடன் வழங்கியுள்ளார்கள்.


`விருத்தங்களைத்தொடர்ந்து ,திருவகுப்புகளை பொருளுடன் குருஜியின் குரலில்
வழங்க விரும்புகிறோம்
.


திருவகுப்புகள் தொடரும்.

Tuesday, 27 January 2015

படி விழா 2015

வரும் 1.2.2015 ஞாயிறு அன்று நடை பெற உள்ள படிவிழாவில் இடம் பெரும் பாடல்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம்:




அன்பர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

முருகா  சரணம்! 


Friday, 23 January 2015

தை அமாவாசை..... அன்னை அபிராமி தரிசனம்

                                


                                               

                                             
                                                 
தை அமாவாசையன்று அபிராமி பட்டருக்கு அம்மை அருளிய விழா திருக்கடவூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்று அம்பிகை மலர் அலங்காரத்தில் அருட்காடசி தருகின்றாள். அப்போது கொடி மரம் அருகே அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாரதனை லாட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது முழு நிலவு தோன்றியதை உணர்த்தும் வகையில் வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கின்றார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர்.
அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல்ஜொலிக்க காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேரனந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆனந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னை” என்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!
———————அபிராமி அந்தாதி பாடல் 79
கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அம்மையின் திருவடிவம் அவர் கண்ணிலும் நெஞ்சிலும் எப்போதும் எப்படி நிறைந்திருந்தது அவரே பாடுகின்றார் இவ்வாறு
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.
பொருள்: என்னுடைய துன்பங்களை எல்லாம் தீர்த்து அருளுகின்ற என் அன்னை திரிபுர சுந்தரியின் திருக்கரங்களில் ஏந்தியிருக்கின்ற பாசம், அங்குசம், பஞ்ச பாணங்கள், கரும்புவில், ஒளி பொருந்திய திருமேனி, சிற்றிடை, தனங்கள் ஆகியவை எப்போதும் அடியேன் பார்க்கும் திசைகளிலெல்லாம் தெரிகின்றன.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மென்கொடி குங்குமத் தோயமன்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே (1)
என்று பாடத்தொடங்கி ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சங்கிலியாக தறித்துக் கொண்டு வந்தார்.
விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதஞ் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே (79) என்று பாடும் போது
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, லோக மாதா, ராஜ ராஜேஸ்வரி, ஜகத் ஜனனி, லலிதாம்பா, தயாபரி , கருணைக் கடலாம் எம் அம்மை பட்டர் முன் கரங்களில் அங்குசம், பாசம், மலர் அம்பு , கரும்பு வில்லுடன் தோன்றி திருதரிசனந் தந்தருளி பட்டருக்காக தனது தடாகங்களில் ஒன்றை கழற்றி வானிலே வீச மன்னரும் மற்றையோரும் அஞ்சும்படி தை மாத முழு அமாவாசை நாளில் பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன் தோன்றினான். இங்ஙனம் அமாவாசை நாளில் பூரண சந்திரன் தோன்றும்படி அம்மை அபிராமியின் அருளால் அதிசயம் நடத்திக் காட்டினார் அபிராமி பட்டர்.
அரசன் அவ்வதிசயத்தைக் கண்டு அவரிடத்தில் தனது தவறுக்கு மன்னித்தருளுமாறு வேண்டி அவரிடம் மிக்க அன்பும் அச்சமும் மதிப்பும் உடையவராய் அவருக்கு மான்யமும், தாமிர சாசனமும் கொடுத்து போற்றினார்.
அபிராமி பட்டர் இயற்றிய 100 பாடல்களும் அருந்தமிழ் செம்பாடல்கள் அந்த பாடல்களை அகங்கனியப் பாடி வழிபட்டால் உடல் குழையும், என்பெல்லாம் னெக்குருகும் விழி நீர் ஊற்றென வெதும்பி யூற்றும் நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகும்
அந்த அபிராமி அந்தாதியை பட்டர்.
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை, அங்குசம் பாசம் குசுமன் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே !
என்று நாம் அனைவரும் உய்ய நூல் பயனாக கடைப் பாடலாகப் பாடி முடிக்கின்றார்.
அதானால்தான் திருக்கடையூர் தலத்தில் அம்மையின் தடாகங்கள் சிறப்பு, பதினாறு கலைகளுடன் பூரண நிலவானது அன்னையின் தடாகங்கள், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், தை அமாவாசை மற்றும் சிறப்பு பூஜை நாட்களில் தங்க கவசத்துடன் அம்மைக்கு மூன்று அடுக்குகள் கொண்ட தடாகங்கள் அணிவிக்கப்படுகின்றன. சமயம் கிடைக்கும் போது சென்று தரிசியுங்கள்.
இவர் மேலும் அபிராமி அம்மையின் மேல் பதிகமும் பாடியுள்ளார் அந்த பதிகத்திலிருந்து ஒரு அருமையான இரு பாடல்கள்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடுவாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாதவாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய தொண்டரொடு கூட்டுகண்டாய்
அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே ! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி அபிராமியே.!
* * *
சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனையை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தன தான்யம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த
குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக்கடவூரில்
வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

அந்தாதி என்பது 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று இறுதி எழுத்து, சொல், அசை, சீர் ,அடி ஏதேனும் ஒன்று அதற்கடுத்த முதல் பாடலின் முடிவாக வருவது அந்தாதி

உதவி .....அருளாளர் குமார் ராமநாதன்  முகநூல் வழி

இந்த நன்னாளில் திருப்புகழ் அன்பர்கள் அன்னை அபிராமியை துதித்து அபிராமி அந்தாதி /பதிகம் பாடல் கலை இசைத்து அருள் வேண்டுகிறார்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அன்பர்களின் ஆன்மீக விழாவில் இடம் பெற்ற அபிராமி அந்தாதியின்  இசை நிகழ்வை கேட்போம்

https://www.youtube.com/watch?v=gNOr0g1Bbyk

முருகா சரணம் 

வேல்மயில்விருத்தம்(தொடர்ச்சி ): வேல் விருத்தம் பாடல் 10



      
பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 


கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல
குருஜியின் குரலில்


முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல


                                   மயில்  விருத்தம்  பாடல் 10

                    


  

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன்

நிராசத ( மத்யமாவதி )


எந்நாளும் 





குருஜியின் குரலில்






முருகா சரணம் 

தை பூசம் : இசை வழிபாடு 03.02.2015

இநத நன்னாளில்  பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன.  இந்நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர்

சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.
தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும்.

பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் கூற முடியாத  பிரமனை முருகன் சிறையில் அடைத்த நிகழ்வு நாம் அறிந்ததே. தந்தையார் முருகனிடம்உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போது, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.

திரிபுர சம்ஹாரம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்

சூரபதுமனை அழிக்க முருகன் தன் தாயிடமிருந்து வேல் பெற்ற நாளும் தைப் பூச நாளாகும்.
      
அருட்பெரும் ஜோதி வள்ளலார் இராமலிங்க அடிகள் ஜோதியோடு கலந்ததும் இந்த தைபூச தினத்தில் தான்

விரிவான தகவல் அருளாளர் உமா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள கட்டுரையை கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம:
     

 வழக்கம் போல் நம் தைப்பூச வழிபாடு 3.2.2015  அன்று மாலை 4.00 மணி அளவில் தொடங்கி நடைபெறும் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது, அன்பர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.



       முருகா சரணம்! 

Monday, 19 January 2015

வேல் மயில் விருத்தம்(தொடர்ச்சி ): வேல் விருத்தம் பாடல் 9

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 

http://www.kaumaram.com/mayilvirutham/mv_09.htm

கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல

குருஜியின் குரலில்

https://www.youtube.com/watch?v=m0LCFSWxlDY&index=9&list=PLtegElKZ5XACb3CJjKyWRhoGIeE_Vd4CO



முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல 




திருவனந்தபுரம்  அருளாளர் /திருப்புகழ் ஆசிரியர் பாலு ஐயர் சமீபத்தில்  நடந்த கந்த சஷ்டி வழிபாட்டில் போது மயில் திரு நடனம் ஆடி பரவசப்படுத்தியத்தை  தம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Message

         "We had a good tun-out on all days during this year's Shashti Bhajan.

 The mayil (peacock) of the temple was dancing to our bhajan."










                                                மயில்  விருத்தம்  பாடல் 9

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன்


http://www.kaumaram.com/mayilvirutham/mv_09.htm

குருஜியின் குரலில

https://www.youtube.com/watch?v=sPu3eEBa5pg&list=PLtegElKZ5XADdCY7XEeoTuigsxjs6mpQQ&index=9

d4CO

பாடல்கள் தொடரும்


                     

                      

Sunday, 18 January 2015

வேல்மயில்விருத்தம்(தொடர்ச்சி ): வேல் விருத்தம் பாடல் 8




பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 

..http://www.kaumaram.com/velvirutham/vv_08.html

கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல
குருஜியின் குரலில்

முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல

https://www.youtube.com/watch?v=Ysln-XzOiY0&list=PLtegElKZ5XACb3CJjKyWRhoGIeE_

Vd4CO&index=8





                                                மயில்  விருத்தம்  பாடல் 8

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன


http://www.kaumaram.com/mayilvirutham/mv_08.html

.குருஜியின் குரலில்

Saturday, 17 January 2015

வேல் மயில் விருத்தம்(தொடர்ச்சி ):வேல் விருத்தம் பாடல் 7

பாடல் ,பதம் பிரித்து பொருளுடன் 

கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல
குருஜியின் குரலில்

முருகன் அடியார்கள் அமைப்பின் அருளாளர்ஸ்ரீநிவாசன்  விஸ்வநாதன் U Tube வடிவத்தில் வழங்கி ,பாட்டின் பொருளையும் தம் குரலில் விளக்குகிறார்.அவர்களுக்கு நன்றிகள் பல


                                   மயில்  விருத்தம்  பாடல் 7

பாடல் ,பதம் பிரித்து பொருளுட


http://www.kaumaram.com/mayilvirutham/mv_07.html

குருஜியின் குரலில்

அருளாளர் கோவை என்.வி வைத்யநாதன் வழிபாட்டில் 

7https://www.youtube.com/watch?v=jH30HYeZ248

பாடல்கள் தொடரும்