Friday, 12 December 2014

திருப்புகழ் நவமணிகள் டிவிடி வெளியீட்டு வைபவம்

                       

 திருப்புகழ் நவ மணிகள் -குறுந்தகடுகள் ஒரு  பொக்கிஷம்:

முருகன் திருவருளால் இந்நேரம் குறுந்தகடுகள்  அன்பர்கள் திருக்கரங்களில் தவழ்ந்து அருள்பாலித்திருக்கும் என நம்புகிறேன்.முயற்சி திருவினையாக்கும் என்ற ஆன்றோர்களின் வாக்குப்படி நம் கையில் தவழும் இந்த அருள் பிரசாதத்துக்கு அரும் பாடுபட்ட அருளாளர்களை போற்ற வேண்டியது நம் கடமை என்ற உணர்வினால் இந்த சிறு குறிப்பை நான் அறிந்தவரை அளிக்க விரும்புகிறேன்.

ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஓர் அதிகார பூர்வமான  அமைப்பு செய்ய வேண்டிய அருஞ்செயலை தனி மனிதன் ஒருவராக நின்று மனித குலத்தின் சேவை கருதி, உயிர் மூச்சாக அரும்பாடு பட்டு இறைவன் அருளால் நிறைவேற்றிய பல மகான்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர்.

உதாரணமாக தமிழ்த்தாத்தா .வே .சுவாமிநாத ஐயர் அவர் இல்லையேல் ,இன்று தமிழ் இல்லை.இலக்கியங்கள் இல்லை.வீடு வீடாக தேடிச்சென்று ஓலைச்சுவடிகளை மீட்டு தமிழைக் காப்பாற்றியவர். ஒரு சமயம் ஆடிப்பெருக்கில் கிராம வாசிகள் சுவடுகளை காவிரியில் விட்டபோது நீரில் போராடி சுவடுகளை மீட்டார்.மற்றோடு சமயம் போகி பண்டிகையின் போது சுவடுகளை மக்கள் எரித்தபோது நெருப்புடன் போராடி அவைகளை காப்பாற்றி , தமிழையும் காப்பாற்றினார்.

அடுத்து நம் சுப்ரமணிய பிள்ளையும் ,செங்கல்வராய பிள்ளையும் நமக்கு இன்று கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் அவர்கள் அரும் பாடுபட்டு சேகரித்ததுதான்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய மகா பணியை தனி மனிதன் அளவில் சாதித்தவர்கள

.. சுப்பிரமணிய  பிள்ளை என்னும் இறையருள் பெற்றவர் திருப்புகழ் அமிர்தம்  குடிப்பதற்கு ஊன் வலிக்க உயிர் வலிக்க, ஊர் தோறும் சென்று கரையான் அரித்தது போக கிடைத்த  திருப்புகழ்ப் பாக்களை சேகரித்தார். தந்தை வைத்து விட்டுப் போன சொத்தை தலை மேல் கொண்டு, தான் மட்டும் அனுபவிக்காமல் தணிகைமணி .சு. செங்கல்வராயப் பிள்ளை அச்சேற்றி புத்தக வடிவில் எல்லோருக்கும் வாரி வழங்கினார். அம்ருதத்தை அனுபவிக்கச் செய்தார். அம்ருதம் மந்திரமாகி மாறி சேஷாத்ரி ஸ்வாமிகள் மூலமாக வள்ளிமலை ஸ்வாமிகளின் செவிக்குள் சென்றது ஸ்ரீராமானுஜர் போலவே திருப்புகழ் மந்திரத்தை ஸ்வாமிகள் எல்லோருக்கும் கற்றுத் தந்தார்.வயல்வெளிகளில்எல்லாம் திருப்புகழ் ஒலித்தது.

 இதுபோல் பல மகான்களை கூறலாம்...

நம் குருஜி தனி மனிதனாக ,இறைவனின் தூதராக நமக்கு 503 திருப்புகழ் பாடல்களை இசை அமைத்து நம்மை இறைவன் சந்நிதானத்துக்கே கொண்டு சென்ற மகான், 50ஆண்டுகளுக்கு மேலாக அவர் கற்பித்த பாடல்கள், அவர் தலைமையில் நிகழ்ந்த வழிபாடுகள்  பல அன்பர்கள் வசம் தான் சிதறிக்கிடந்தது. அதிர்ஷ்ட வசமாக திருப்புகழ் பாடல்கள்  அபிராமி அந்தாதி  (கற்பிக்கும் முறையில்) ஒலி நாடாவாக உருப்பெற்று  அன்பர்கள் அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டது. அது அன்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது .

ஆனால் குருஜி நிகழ்த்திய வழிபாடுகள் அன்பர்களுக்கு எட்டாத கனியாகவே இருந்தது.அவர் தங்கள் பகுதிகளில் நடத்திய வழிபாடு களில் மட்டுமே கலந்து கொண்டு அனுபவித்தார்கள்.கடந்த 60,70,80 களில் நடைபெற்ற வழிபாடுகளை அனுபவிக்க தவித்தார்கள்.வழி தான் தெரியவில்லை.யாரும் எந்த விதமான முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.மாறாக பல காரணம் காட்டி தட்டிக் கழித்தார்கள்.

நம் முருகப்பெருமான் இவற்றையெல்லாம் அறியாதவரா  என்ன?அவர் அருள் ஆணையின் படி அருளாளர்கள் சிலர் ஒலி நாடாக்களின் மூலம் பதிவு செய்தனர்.அந்த அருளாளர்களில் ஒருவர் தன்னுடைய குழுத்தளம் மூலமாக பல அன்பர்களுக்கு அவ்வப்போது அளித்தார். அதுமட்டும் அல்லாமல் குருஜியின் வகுப்புகளின் ஒலிப்பதிவையும் அளித்தார். இருப்பினும் இவைகள் மூலமாக  குறிப்பிட்ட சிலரே பயன் அடைந்தனர். இந்நிலையில் அவைகள் யாவும் அன்பர்கள் அனைவரையும் சென்று  அடைய வேண்டும் என்ற தீராத தாகம் அவர் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது.

நம் பெருமான்  அருளால் அது நிறைவேறும் காலமும் வந்தது.

சுமார் 40 வருட காலத்தில் குருஜி அவர்கள் நிகழ்த்திய பஜனைகளை ஒலி நாடாக்களில் பதிவு செய்து, பல்வேறு அன்பர்களிடம் இருந்து அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஒலிப்பதிவு செய்த ஒலி நாடாக்களையும் சேகரித்து, தொகுத்து அதை ஒரு albumஆக வெளியிட விரும்பினார்.நம் குருஜி அவர்களிடம் இதை வெளியிட அனுமதி கோரியபோது, குருஜி இத்தொகுப்பினை வெளியிட இசைந்தார். ஆனால் இத்தொகுப்பு எல்லோருக்கும் இலவசமாக அளிப்பதானால் இப்பணியினை செய்ய அனுமதித்தார்.

ஆனால் ஏனோ அது குருஜின் காலத்தில் நிறைவேறவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த அருளாளர் மனத்தில்  ,குருஜியின் படைப்புகள் அனைத்தையும் குறுந்தகடுகள் வடிவில் உருவாக்கி அன்பர்கள் யாவருக்கும் இலவசமாக அளிக்கவேண்டும் என்ற தெய்வீக எண்ணம் உதித்தது

தன்னுடைய மூத்த வயதிலும் சுறுசுறுப்பாக செயல் பட்டார்.ஐந்தரை லட்சம் ருபாய்  வரை நிதி திரட்டினார்.பல பகுதிகளுக்கு அலைந்து பலருடன் உரையாடினார்.அரும்பாடு  பட்டு சேகரித்தார்.

இந்த தெய்வீக பணியில் சில பெங்களூர் அன்பர்கள் தலை தூக்கி அவருக்கு தோளோடு தோளாக நின்று பங்கெடுக்க உறுதி பூண்டனர்.பல சந்திப்புகள் நிகழ்ந்தன.சேகரிக்கப்பட்ட audio/ video முதலியவற்றில் உள்ள குறைகளை நீக்கி மேம்படுத்தி ,குருஜி இடம் பெறாத பகுதிகளை  நீக்கி , 6 DVDகளில் அளிப்பதென்றும் ,3000 பிரதிகள் (மொத்தம் 18000 குறுந்தகடுகள்) எடுப்பதாகவும்,குருஜியின் முதல் நினைவுநாள் அன்று வெளியிட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

புதிய படைப்புக்கு  "திருப்புகழ் நவமணிகள் "என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது.

அருளாளர்கள் களத்தில் இறங்கினர்.பெங்களூர் அருளாளர் ஒருவர் ஒலி நாடாக்களின், இசை வழிபாடுகளை (nearly 800 hours of listening) முழுவதும் கேட்டு   அவற்றில் இருந்த discontinuities ,mixing of bhajans எல்லாவற்றையும் சரி பார்த்து தொகுத்து (193 hours of listening time ஆக) கொடுத்தார்.மற்றொரு அருளாளர் தன் உடல் நிலை சரியில்லாத போதும் இந்த தெய்வீக பணியில் முழு மூச்சாக பாடு பட்டார்.

இந்த தகடுகள் எல்லாவற்றையும் studio வில் கொடுத்து sound improvement செய்ய வேண்டியிருந்தது. since the bhajans were tape recorded in simple recorders available at those periods. the sound quality had to be improved a lot. For good digital recording from tapes the studio time required is generally 3 times that of listening time

 The sound engineer sri Umesh had given his energy and time and expertise for this project for nearly 200 hours of work without charging any money. Only Studio rental charge of Rs. 85,000/- was paid.

 A word about Umesh. He is a Coorgi (Kannadiga),who does not know Tamil, a much sought after sound engineer,(Has assisted sri L. Subrahmanyam violin  maestro and many similar greats) he decided to do this after hearing Grujis bhajans .saying  that this divine music should reach all.

Ananya studio and finally  Navabharath printers got good quality DVDS did the printing and copies of DVDS and above all couriering it to different regions of TA.

There are some inherent problems in the tapes which could not be removed. In some places the external noise could only be minimised. Such  shortcomings can be excused. (to remove such problems more hours of Studio time was required but the album was planned to be brought on Gurujis Birthday)
.

The DVDS are brought with the sole aim of spreading it to youngsters  who have access to technology .and teachers who can use them to learn and teach .It is clearly stated that the copies can be made and distributed so that nobody complains about non availability.

நம் பெருமானின் பேரருளால்  இந்த ஒப்பிடமுடியாத திருப்பணிகுறித்த நேரத்தில் முடிவுற்று குறுந்தகடுகள் தயாரானது.

பொன் எழுக்களால் பொறிக்கப்பட வேண்டிய அந்த நாளும் வந்ததுஆம்.ஜூன் மாதம் 6ம்நாள். நம் குருஜியின் முதல் நினைவுநாள்.அருளாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட அற்புத நிகழ்ச்சி.மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இசை வழிபாடு இரண்டு மணி நேரம் நிகழ்ந்தது..இசைவழிபாட்டிற்கு பின் டிவிடி ஆல்பம் வெளியீடு நடந்தது.


குருஜி மாமி தமது திருக்கரங்களால் முதல் பிரதியை குருஜியின் அண்ணா மகன் மும்பை மணி சாருக்கு தந்தருளினார்கள்.
தொடர்ந்து அனைவரும் ஓரோர் காப்பிகளை மாமியிடமிருந்து பெற்றனர்.

குருஜியின் சானித்தியத்தை அனைவரும் உணர்ந்தனர் மகிழ்ந்தனர்

நிகழ்ச்சியை நாமும் கண்டு களிப்போம்:


பின்னர் மின்னல் வேகத்தில் மற்ற பிரதிகள் எடுக்கப்பட்டு ,நம்மை தேடி வந்தன.நம் வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக நமக்கு அருள் பிரசாதமாக  வழங்கப்பட்டுள்ளன.நான் இந்த ஒப்பற்ற நிகழ்வுகளை  ஒரு யாகத்துக்கு சமமாகவே துதிக்கிறேன்.

DVD யில் அதன் பொருளடக்கம் விபரமாக கொடுக்கப்பட்டுள்ளது .திரட்டப்பட்ட ரூ 5,31,560 க்கு வரவு செலவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


ஸ்ரீமத் பாகவதத்தின் முடிவில் ,ஸ்ரீ கிருஷ்ண பகவான் தான் பாகவத கிரந்தத்தில் உறைவதாக வும் அதன் மூலம் பக்தர்கள் அனைவரிடமும் உறைவதாகவும்,அருள்பாலிப்பதாகவும்  கூறியுள்ளார்.அந்தவகையில் நானும் நம் குருஜி இந்த ஒலி வடிவத்தில் உறைகிறார்.நம் இல்லத்திலும்,உள்ளத்திலும் உறைகிறார் என்று உணருகிறேன்.பாகவத கிரந்தத்தை போல் இதையும் நம் பூஜை அறையில் வைத்து துதிக்க வேண்டும் அது மட்டும் போதுமா?

குருஜி தன்னை திருப்புகழ் தொண்டன் என்று தான் அழைக்க விரும்பினார்.அன்பர்கள் அவருக்கு தொண்டர்கள் நம் முருகப்பெருமான் அடியார்கள் மனம் உருகி வழியும் கண்ணீரில் ,தான் அபிஷேகம் கொள்வதாக அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் உரைக்கிறார்.

ஆராதன  ராடம் பரத்து மாறாதச  வாலம் பனத்து 
            மாவாகன  மாமந்திரத்து                                   மடலராலும்

ஆரார்தெச மாமண்டபத்தும்  வேதாகம மோதும் தலத்து
            மாமாறேர தாமின் தனத்து                             மருளாதே 

நீராளக  நீர்மஞ்சனத்த நீடாரக  வேதண்ட மத்த 
             நீனானற வேறின்றி நிற்க                                நியமாக 

நீவாவென நீயிங்கழைத்து பாராவர வாநந்த சித்தி 

             நேரேபர மாநந்த முத்தி                                     தரவேணும் 

எந்த விதமான  பயனையும் எதிர்பாராமல் அருளாளர்கள் அளித்துள்ளார்கள் அந்த பயனை நாம் அடைவதில் என்ன சிந்தனை.?பூசிப்போம்,தினம் ஒரு மணி நேரமாவது குருஜின் பாடலைக் கேட்போம்,சேர்ந்துபாடுவோம்.முருகப்பெருமானின் சன்னதியில் இருப்போம். நம் இளைய தலைமுறையினரை நம் இயக்கத்துக்கு இழுப்போம்.அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் வல்லவர்கள். இசை உலகில் உயந்த நிலையில் உள்ள இளம் கலைஞர்களே  இதற்கு உதாரணம்.  .வேண்டியது பெற்றோகளின்  ஊக்கமும் மன உறுதியும் தான்.

அடுத்து குருஜியின் ஆணைப்படி.DVD பிரதிகளை எடுத்து கிடைக்காதவர்களுக்கு அளிப்போம் ஆனந்தப்படுவோம்.

அதுவே  அருளாளர்களுக்கு நாம் செலுத்தும் தலையாய நன்றிக் கடன் ஆகும்.

DVD களில் எந்த ஒரு அருளாளரின் திரு நாமமும் குறிப்பிடப்படவில்லை.கோவிலுக்கே சிறிது பொருளுதவி செய்து தன் பெயரை விளம்பரம் செய்யும் இக்காலத்தில் ,இந்த மகத்தான சேவையை யில் ஈடுபட்டவர்கள் திரை மறைவாக உள்ளது அவர்களின் பண்பிற்கும் நம் குருஜி யின் உபதேசம் படி வழி நடப்பதற்கும் எடுத்துக்காட்டு.

அந்த வகையில் நானும் அவர்களின் திரு நாமங்களை வெளியிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

அந்த அருளாளர்களுக்கும்குருஜியின் திருப்புகழ் இசை வடிவை பகிர்ந்தவர்களுக்கும், CD க்களை உன்னதமான முறையில் தயாரித்த பொறியாளர்களுக்கும் ,பொருளுதவி செய்த பெருந்தகைகளுக்கும் ,குந்தகடுகளை  அன்பர்களிடம் சேர்த்தவர்களுக்கும்  இந்த தெய்வீக பணியில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.அவர்கள் என்றென்றும் DVDயிலும் நம் இதயங்களிலும் உறைபவர்கள்.
முருகா சரணம்!

-மும்பை வெங்கடராமன்.

No comments:

Post a Comment