Thursday, 19 June 2014

வைகாசி விசாகம் "2014"

முருகன் திருவருளால் வைகாசி விசாகம் சிறப்பாக இனிதே நடைபெற்றது.மும்பையின் பல பாகங்களில் இருந்தும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

குறிப்பிட்ட படி, ஷண்முக சஹஸ்ரநாம அர்ச்சனை .அஷ்டோத்திர நாமாவளியுடன் தொடங்கி ,சுப்பிரமணிய புஜங்க பாராயனத்துக்குப்பின் வழிபாடு தொடர்ந்தது.

பாடல் பட்டியலை பார்த்த அன்பர்களுக்கு வியப்பு.வழிபாடு ஒரு மணிக்குள் முடியும் அளவில் இருந்தது.அநுபூதி  பாராயணம் முடிந்தபின் பாலு சார் புன்னகையுடன் ,இப்போது வகுப்பகள் முழுவதும் பாட வேண்டும் என்று பணித்தார்.அன்பர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி ஒரே மூச்சில் முடித்தனர். பழனி வகுப்பில் "முருகேசனே வர வேணுமே "என்று இறைஞ்சுகையில் பலர் உணர்ச்சி வசப்பட்டனர்.தங்களை மறந்தனர்.வேல் விருத்தம் மயில் விருத்தம்  தொடர்ந்து ,"எந்நாளும் ஒரு சுனையில்"தொடங்கும் மயில் விருத்தம்   பல ஸ்ருதியாக அமைந்தது பெருமானின் கருணை.

குரு பாலு சார் அழகான புன்னகையுடன் "நீங்கள் பாடியது உங்களுக்கே திருப்தியாக இருந்திருக்கும் .ஏனெனில்,நீங்கள் பாடவில்லை .குருஜி தான் பாடினார்."என்று கூறியதும் அன்பர்கள் அகமகிழ்ந்தார்கள்.

பூஜா விதிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது 

நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை சமர்ப்பிக்கிறோம். அருளாளர் பாலாசுப்ரமணியத்துக்கு நன்றிகள் பல.










No comments:

Post a Comment