மும்பையில் 40க்கும் மேற்பட்ட திருப்புகழ் வகுப்புக்கள் நடை பெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பல இன்னல்களை மேற்கொண்டு வகுப்புக்களை தவறாமல் நடத்தி வருகிறார்கள்.அதை நன்கு உணர்ந்த அன்பர்களும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.இது ஆசிரியர்களுக்கு மிக்க மன மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
அத்தகைய வகுப்புக்களில் ஒன்று செட்டாநகர் பகுதியில் 25 ஆண்டுகளாக நடை பெற்று வரும் வகுப்பு 24.3.1989 புனித வெள்ளி அன்று தொடங்கப்பட்ட வகுப்பு பல சிறப்புக்கள் கொண்டது.பாலு சார்/மாமி இருவரும் கற்பிக்கும் ஒரே வகுப்பு. இதில் கலந்துகொள்வது தங்கள் பாக்கியம் என்றே மாணவர்கள் உணர்ந்து கற்று வருகிறார்கள் இடையில் வகுப்புக்கு விடுமுறை என்பதே கிடையாது.சார்/மாமி தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியா விட்டால் மற்ற ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.சொல்லப்போனால் சில ஆசிரியர்களே இங்கு மாணவர்கள்.செம்பூர் பகுதிகளுக்கு வர நேரும் மற்ற ஆசிரியர்களும், அன்பர்களும் வகுப்பில் கலந்து கொள்வதை தங்கள் முதல் கடமையாக கருதுகிறார்கள்.மற்றும் பாடல்களுக்கு வகுப்பு மாணவர்கள் சிலர் அவ்வப்போது பொருள் /விளக்க வுரை கூறி மற்றவர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்கள்.
வகுப்பின் ஆண் டு விழா ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி யன்று வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு வெள்ளி விழாவாக அமைந்ததால் மிக சிறப்பாக வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. அஹமதாபாத் குடி பெயர்ந்துள்ள கல்யாணி மாமி கலந்து கொண்டது அன்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.சார்/மாமி கௌரவிக்கப்பட்டார்கள்.
செம்பூர் /காட்கோபர் பகுதில் உள்ள மற்ற அன்பர்களும் ,குறிப்பாக இளைய தலைமுறையினரும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பெருமான் அருள்பெற வேண்டுகிறோம் .
முகவரி
Smt. Brinda Karthik
3.Vanamaali Bldg
Cheddanagar
Mumbai 400089
Tel.25258215
சில புகைப்படங்கள் அன்பர்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.