நிகழ்ச்சியின் ஒளி/ஒலி வடிவங்கள் UTUBE வாயிலாக வெளிவந்துள்ளன.அன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
Ganapathy Homam
Subramanya Homam
மணி விழாவை மங்களகரமாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாதர்கள் குத்து விளக்கேற்றி துவக்கினார்கள்.
விழா துவக்கம் ..வரவேற்புரை
விழாவை துவக்கி வைத்த திருப்புகழ் அன்பர்கள்அமைப்பின் தலைவர் திரு கே. என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திருப்புகழ் இசை வழிபாடு முறையை அதன் சிறப்பை பகிர்ந்தார்" பஜனை என்று கூறாமல் வழிபாடு என்று அழைத்தது வழிபாட்டில் முறை ,த்யானம் ,பூஜை முதலியவைகளை உள்ளடக்கியதுதான்.மற்றும் இளம் சிறார்கள் தற்போது பெருமளவில் ஈடுபட்டுள்ளது பெரு மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.". பழனி வகுப்பு பாடி முருகேசனே வரவேணுமே என்னும் போது முருகனே நேரில் வருவார் என்று நெகிழ்ந்தார்.
செயலர் திரு. நாகேஷ் உரையாற்றும்போது திருப்புகழ் இசை வழிபாடு புத்தகம் கிட்டத்தட்ட 40,000 அன்பர்களிடம் பிரசாதமாக சேர்ந்து உள்ளதுஎன்றார். விரைவில் 12ம் பதிப்பு வெளியிடப்போவதாகவும் பெருமையுடன் அறிவித்தார்.
மற்றும் கன்னட வழிபா டு புத்தகம் ஆன்மீக பெருவிழாவின் போது வெளியிடப்பட்டது.என்றும்,மலையாள பதிப்பை திருவனந்தபுரம் பாலு ஐயர் வெளியிட்டுள்ளதாகவும் இந்த மணிவிழாவில் ஹைதராபாத்தில் திருப்புகழ் வகுப்புகள் நடத்தி அன்பர்களை இசை வழிபாட்டில் ஈடுபடுத்திய திருமதி சரஸ்வதி மாமி வழியில் திருமதி லஷ்மி வெங்கட்ராமன் தம்பதியர்பெரு முயற்சி எடுத்து உருவாக்கியுள்ள தெலுங்குப் பதிப்பு வெளியிடுவதாகவும் கூறினார்.
தெலுங்கு பதிப்பின் முதல் புத்தகத்தை வெளியிட்ட திரு கே என் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமிருந்து முதல் பிரதியை வெங்கட்ராமன் லஷ்மி தம்பதிகளும்அடுத்து ஹைதெராபாத் அன்பர் ராமமூர்த்தியும் பெற்றுக் கொண்டனர் .
குறியீடு
60 ஆண்டுகள் நிறைவையொட்டி ஒரு குறும்படம் செய்திப்படமாக வெளியிடப்பட்டது .குருஜி வகுப்புகள் எடுக்கும் காட்சி இதன் சிறப்பம்சம் .உலகெங்கும் ஆசிரிய அன்பர்கள் இசை வழிபாட்டு முறையை பரப்புவதை குறும்படம் விளக்கியது. பல திருப்புகழ் அன்பர்கள் குருஜியின் ஆணைப்படி தான் வகுப்புகள் நடந்துவருவதாகவும்,மனம் நெகிழ உரைத்தனர்.
கண்கலங்க வைத்த சம்பவம் திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள்",மனோஜ் என்ற மாற்றுத்திறனாளிக்கு (பார்வை குறைஉள்ளவர் ) அவர் பாடல்களை பார்க்க முடியாத நிலையில் மூர்த்தி சார் திரும்ப திரும்ப பாடியதோடுமட்டுமல்லாமல் மாணவன் துடையிலேயே தாளம் போட்டு தாள விளக்கத்தை உணர்த்தி ,கற்றுத்தருவதையும்,அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு MPHIL செய்வதாகவும் தெரிவித்தபோது அங்கு குருத்வம் வெளிப்பட்டது. கண்கள் கலங்கின.மாணவரின் வெற்றிக்காக பெருமானின் அருளையும்,குருஜியின் ஆசிகளையும் வேண்டுவோம்.
குருஜிதியின் புதல்வி திருமதி மாலா ராமகிருஷ்ணன் குருஜியின் ஆணைப்படி Bostan ,California,Cicago,Newjercyமுதலிய இடங்களில் நேரடியாகவும்,Online மூலமாகவும் வகுப்புகள் நடப்பதாகவும் அன்பர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதாகவும் கூறினார்.
பெருமானால் நமக்கு அளிக்கப்பட்டவர் குருஜி, அவரால் நமக்கு நியமிக்கப்பட்டவர்கள்திருப்புகழ்ஆசிரியர்கள்எத்தனைஇடையூறுகள்,உடல் நலக்குறைவு,குடும்ப பொறுப்புகள் இருப்பினும்,தங்கள் வாழ்க்கையையே திருப்புகழுக்குஅர்ப்பணித்து,நீண்ட பயணம் செய்துஎவ்வித பிரதி பலனும் எதிர்பார்க்காமல், வகுப்புகளை நடத்தி அரும் தொண்டாற்றிவரும் குருஜியின் பிரதி பிம்பங்களான நல்லாசிரியர்களைஎன்றென்றும்வணங்குவோம்.போற்றுவோம்.அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் திருப்புகழ் யாவையும் கற்று வழிபாடுகளில் கலந்துகொண்டு,அடுத்த இளைய தலைமுறையினரையும் ஈடுபடுத்துவதே ஆகும்.
குறியீடு
அரும் பாடுபட்டு தயாரித்து வெளியிட்டுள்ள கணேஷ் சுந்தரம் அவர்களுக்கு நன்றிகள் பல.
அடுத்து திருப்புகழ் பாடல்களில் அமைந்த தாள நுணுக்கங்களை பற்றி செயல் முறை விளக்கம் நிகழ்ச்சி
தாள விளக்கங்களை பற்றி விரிவாக இசை வழிபாடு புத்தகத்தில் காணலாம்.திருப்புகழ் பாக்களில் 1008 சாந்த வகைகள் இருப்பதாக பெரியோர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.
503 பாடல்களில் பல பாடல்கள் திஸ்ர ரூபகம்,திஸ்ர த்ருபுடை ,திஸ்ரத்ருவம் , ,சதுஸ்ர த்ருபுடை ,சதுஸ்ர ரூபகம்,சதுஸ்ர ஏகம் ,சதுஸ்ர ஜம்பை,சதுஸ்ர அட,சதுஸ்ர மட் யம் ,ஸத்ஸர துருவம்,கண்ட த்ருவம் ,கண்ட ஜம்பை,மிஸ்ர அட,சங்கீர்ண சாபு காலங்களில் அமைந்துள்ளன
.அதை தவிர திஸ்ர நடை,கண்ட நடை,மிஸ்ர நடை போன்ற நடைகளில்
,மற்றும் 1/4இடம்,1/2 இடம் ,3/4 இடம் தள்ளி எடுப்பு.
இவை எல்லாம் தாண்டி பெரும்பாலான பாடல்கள் அங்க .தாளங்களில் .31/2, 41/2 ,51/2 ,6, 61/2, 71/2 ,81/2 ,9 ,91/2, 11 ,111/2, 121/2, 131/2 .14 ,151/2, 16 181/2, 20..............35 அட்சரங்களில் அமைந்துள்ளன.பாடல்களின் பொருளுக்கு ஏற்பவும் அமைந்துள்ளன.
அது பற்றி டெல்லி அன்பார் ராமமூர்த்தி கூறுவதைக் கேட்போம்.
"அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களை சந்தம் கெடாமல் அங்க தாளங்களில் அமைத்துச் சொல்லிக் கொடுத்திருப்பது, குருஜி திருப்புகழுக்காகச் செய்த முக்கிய பணி என்று நான் கருதுகிறேன். இதனுடைய அருமை மற்ற சபாக்களில் பாடும் திருப்புகழைக் கேட்டால்தான் தெரியும். அவர்கள் வார்த்தைகளை நீட்டி, குறைத்து, சிதைத்து, எட்டு அக்ஷரங்களிலும், திஸ்ரத்ருபுடை , கண்டசாபு, என்ற தாளங்களிலும் அடக்கி, அர்த்தம் புரியாமல் செய்துவிடுகிறார்கள். ஆனால் குருஜி அமைத்துள்ள அங்க தாளங்கள் அழகழகாக, தெளிவாக, வார்த்தைகளை அர்த்தம் புரிந்துகொண்டு உச்சரிக்கவும், பாடவும் உதவுகின்றன. குருஜி கிரேட் தான். வகுப்பில் முதலிலெல்லாம் மாணவர்கள் தாளத்தைக்கண்டு பயந்துவிடுவார்களோ என்று எண்ணியே அதிகம் தாளத்தைப்பற்றி குருஜி அவர்கள் வற்புறுத்தியதில்லை. திருப்புகழ் இசை வழிபாட்டுப் புத்தகத்தில் கூறியுள்ளபடி தற்காலத்தில் கையாளப்படும் தாளங்கள் பெரும்பாலும் லகு, த்ருதம், அநுத்தம் என்ற மூன்று அங்கங்களிலேயே அமையப்பட்டுள்ளன, மற்றைய மூன்று அங்கங்களான குரு, புலுதம், காக பாதம், நடைமுறையில் இல்லை. இதைத்தவிர க்ருஷ்ய, சர்பிணி, பாடகம் என்ற அங்கங்களும் உள்ளன. இந்த அங்கங்களை அமைத்து திருப்புகழ் பாடும் ஒன்றிரண்டு சபாக்கள் இருப்பதாக குருஜி ஒரு சமயம் பேச்சு தாளங்களைப்பற்றிய பல சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டேன். ஆதி தாளம், மிஸ்ர ஜாதி ஜம்பை தாளம், மிஸ்ர ஜம்பை திஸ்ர நடை --- அதாவது சாபுதாளம். அவருடைய கணக்குப்படி 175 தாளங்களுக்கு நான் சார்ட் போட்டு அதற்குப் பெயரையும் கண்டு பிடித்து மகிழ்ந்தேன். உதாரணமாக 12% அக்ஷரம்:-- 1) திஸ்ர ரூபகம் கண்ட நடை 2) கண்ட ஏகம் கண்ட நடை 3) சதுஸ்ர மட்டம் கண்டநடை சாபு என்று எவ்வளவோ முயன்றும் பல தாளங்களைக் கண்டுபிடிக்கமுடியாது தவித்தேன். குருஜியிடமேகேட்கலாமா என்று ஒரு நப்பாசை. ஆனால் கேட்கவில்லை. சிறிது சிறிதாக ஒவ்வொரு பாட்டிற்கும் அவரிடம் சந்தேகங்கள் கேட்டு நான் தாளங்களைப் பற்றி சிறிதளவு கற்றுக்கொண்டு முன்னேறினேன். "..........
கணித மேதை ராமானுஜம் பற்றி சொல்வார்கள்."எண்கள் அவர் முன்னே எப்பொழுதும் நின்றுகொண்டு, அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்கள் இடத்தில் அமருமாம்."அதுபோல்பெருமானின் அருளால் நம் குருஜியின் தேவைக்கு ஏற்ப எல்லா அட்சரங்களும் ஓடி வந்து தங்கள் ஸ்தானத்தில் அமர்ந்ததிருக்க வேண்டும்.
இசை மேதை T .R .சுப்ரமண்யம்" ராகங்களை,பாடல்களை கற்றுக்கொள்வது வெகு சுலபம்.ஆனால்,தாள ஞானம் எல்லறோருக்கும் அமையாது.கடவுள் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம் "என்று அடிக்கடி கூறுவார்.
கச்சேரிகளில் ,பாடகர்கள் ஆதி தாளம்,ரூபக தாளம்,மிஸ்ர சாபு தாளம்,கண்டசாபு தாளம் போன்ற வெகு சுலபமான தாளங்ககளை தங்கள் உடலை வருத்தி,அட்டகாசமாக,ஆரவாரமாக,துடையில் போட்டு ,துடையை புண்ணாக்கி கொண்டவர்களை கண்டிருக்கிறோம்.சிலர் அதையும் தாண்டி துடை மேல் தடித்த துண்டை போட்டு ,துடையை காப்பாற்றியவர்களும் உண்டு.
ஆனால் இங்கு அதெல்லாம் கிடையாது.அன்பர்கள் வெகு சுலபமாக,வெகு நேர்த்தியாக,நளினமாக,அமைதியாக, யதார்த்தமாக,அழகாக ,லாகவமாக தாளம் போட்டு மெய்ம்மறந்து வழிபாடுகளில் இசைப்பதைகண்டவர்கள.வியக்கிறார்கள். சிலர் தாளம் போடாமலே லயத்தில் லயித்து பாடுபவர்களும் உண்டு. பாடலுக்கு ஏற்ற தாளமா? அல்லது தாளத்துக்குகேற்ப பாடல் களா? புரியாத புதிர்தான்.
தாள விளக்கத்திற்கு என்று தனியாக வகுப்புகள் கிடையாது.பின் அன்பர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? எல்லாவற்றிற்கும் ஒரே பதில்".குருவருளும் ,திருவருளும் தான்."வழிபாடுகளில் யார்வழிநடத்தினாலும், அவர்களை குருவாக ஏற்று,அவர்களை பின்பற்றி காலப்ரமாணத்தோடு ஒன்று சேர்ந்து ,சமர்ப்பித்து இசைப்பதுதான்.
அன்பர்களின் சிலர் தாள நுணுக்கங்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை என்பதுதான் உண்மை.அவைகளை நன்கு உணர்ந்து கற்று வழிபாடுகளில் வெளிப்படுத்தினால் அது தனி அனுபவம் தான்.
இதை மனதில் கொண்ட அமைப்பினர் மணிவிழாவில் முதன் முறையாக தாள விளக்கத்துக்கு ஒருசெயல் முறை நிகழ்ச்சியை ஒரு பகுதியை நிர்ணயித்தார்கள்.
இது மூத்த அன்பர் குரு.மும்பை பாலசுப்ரமணியம் அவர்களின் முன்னுரையோடு தொடங்கியது. குருஜியின் இசை வழிபாடுகளுக்கு மிருதங்கம் வாசித்து அனுபவமுள்ள கும்பகோணம் திரு பத்மநாபன் ஒரு lec dem கொடுத்தார் திருப்புகழின் சந்த தாளங்களை பற்றியும் குருஜி அமைத்த தாளங்கள் எப்படி பொருத்தமாக உள்ளது என்றும் விளக்கினார்.மூத்த அன்பர் மும்பை திருமதி .ராஜி பாலசுப்ரமணியம் பாடிக்காட்ட அவர்கள் குருஜி அமைத்த தாளங்களில் திருப்புகழ் பாடுவது எவ்வளவு எளிமையாகவும் ,பொருத்தமாகவும் சுகமாகவும் உள்ளது என்று விளக்கினார் வேறு தாளங்களில் பாடும்பொழுது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பது ராஜி மாமி பாடியபோது நன்றாக புரிந்தது. கேட்டு அனுபவிப்போம்.அன்பர்களுக்கு ஊக்கமளிக்கும் இத்தகைய நிகழ்ச்சி அடுத்த பெரு விழாக்களில் இடம் பெரும் என்று எதிர்பார்ப்போம்.
குறியீடு.
நண்பகல் உணவுக்குப்பின் அன்பர்கள் குருஜியின் நினைவுகளையும் திருப்புகழ் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள் பூனே அன்பர் திருமதி ஜானகி ரமணன் அன்பர்களை ஈர்த்த இசை வழிபாடு பற்றி உரையாற்றினார்.
குருஜியுடன் 60 ஆண்டுகாலமாக பழகிய திரு. ஜி. கிருஷ்ணன் என்கிற ஜிக்கி மாமா உரையாற்றும்போது குருஜியின் பண்புகள் இசை வழிபாட்டில் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி குறிப்பிட்டார். அடுத்ததாக பேசிய வசந்தா பஞ்சாபகேசன் இசை வழிபாடு இறுதியில் ஒரு நிமிடம் அமைதியாக இருப்பது குருஜியின் தவமுறை தியானம் என விளக்கினார் . அடுத்து பேசிய மும்பை அன்பர் திரு பாலசுப்பிரமணியம் இசை வழிபாட்டு முறைகளை குருஜியின் பார்வையில் விளக்கினார்.தொடர்ந்தது திருமதி சித்ரா மூர்த்தி இசைப்பயிற்சி இல்லாத தனக்கு குருஜி காட்டிய அன்பையும் புகட்டிய திருப்புகழையும் படம் பிடித்துக் காட்டினார்.
தொடர்ந்து தமிழிசையில் வல்லவரும்,பன்னிருதிருமுறையை பரப்புவதில் அரும் பணியாற்றிவரும்,சிலப்பதிகாரம் முதல் தற்கால கவிஞர்கள் வரை பலரது கீர்த்தனைகளை மக்கள் T V .வாயிலாக அன்பர்களுக்கு தொடர்ந்து அளித்தவருமான திருமதி ஜே .பி .கீர்த்தனா அவர்களின் திருப்புகழ் இன்னிசை இடம் பெற்றது.பாவத்துடனும்,மெய்ம்மறந்து பாடிய பாடல்கள் அன்பர்களை பெரிதும் மகிழ்வித்தன.சில பாடல்கள் குருஜி வழியில் பாடியது குறிப்பிடத்தக்கது.அனுசரணையாக அவரது சகோதரர் ஸ்ருதி சாகர்புல்லாங்குழல் குழல், .திரு ராகவேந்திரா பிரசாத் வயலின் .திரு பத்மநாபன் மிருதங்கம் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள்.திருமதி கீர்த்தனா திருப்புகழ் அன்பர்களில் ஒருவராக நிலை நாட்டினார் என்று கூறினால் அது மிகையாகாது.
குறியீடு
தொடரும்
முருகா சரணம்