காற்றினிலே வரும் திருசெந்தூர் வள்ளிகல்யாணம்.
வரும் 23-24 ம்தேதிகளில் திருச்செந்தூரில் நிகழ உள்ள வள்ளி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளும் அன்பர்கள் மகா பாக்யசாலிகள்.பல தவிர்க்க முடியாத காரணங்களாலும் உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணங்களாலும் கலந்து கொள்ள இயலாதவர்கள் மனக்குறையுடன் நேற்று வரை இருந்தார்கள் என்பதும் உண்மை.பெருமானின் அருளைப்பாருங்கள். SWASTHIKTV.COM நிறுவனத்தினர் நிகழ்ச்சிகள் முழுவதையும் ஒளி பரப்ப இசைந்துள்ளார்கள்.இது அருள் பிரசாதம்.
வள்ளி கல்யாண அமைப்பாளர்கள் அனுப்பியுள்ள மகிழ்ச்சி கரமான செய்தியை கீழே வெளியிடுகிறோம்.அன்பர்கள் "பெருமான் நம் இல்லங்களுக்கு வந்து அருள்பாலிக்கிறான் "என்று பரவசமடைவது இயற்கை.அதை விட "நம் பெருமானின் சந்நிதானத்தில் நாம் மற்ற அன்பர்களோடு கலந்து கொள்கிறோம் என்ற உணர்வுடன் வைபவத்தை அனுபவிக்க வேண்டும்" என்பதே நம் பிரார்த்தனை.
"....வள்ளி கல்யாண மஹோற்சவத்தினை உலகில் முதன்மை ஸ்தானத்தினை வகிக்கும் ஸ்வஸ்திக் டிவி நிறுவனத்தினர் 23 - 24 தேதிகளில் நேரடியாக முழுவதுமாக ஒளி பரப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள் ( SWASTHIKTV.COM - World's No.1 Devotional Web TV LIVE Telecasting our Valli Thirukalyanam on 23rd & 24th April '2015 . Watch it on WWW.SWASTHIKTV.COM ) வள்ளி கல்யாணத்தை அனைத்து அன்பர்களும் அவர்கள் வீட்டு கம்ப்யூட்டர்களில் மேற் காட்டிய ஐடியில் தொடர்பு கொண்டு அவசியம் பாருங்கள்"
முருகா சரணம்