செம்பூர் முருகன் ஆலய முகப்பில் அருணகிரியாரின் ஆசி...
விழா வழக்கம்போல் 108 பாடல்களுடன் சிறப்பாக நடந்தேறியது. மும்பை அன்பர்களுடன் புனே அன்பர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
அருளாளர் திரு கோபாலகிருஷ்ணன் கைவண்ணத்தில் பெருமான் ஆண்டுதோறும் பல கோலங்களில் வினோத பெருமானாக காட்சி அளித்து அருள் பாலித்ததை முன்னரே புகைப்படங்களில் கண்டுகளித்துள்ளனர்.
இந்த ஆண்டு விசித்ரம் விழா ஆரம்பத்தில் பழனி ஆண்டி கோலத்தில் எழுந்தருளிய பெருமான்...
சிறிது நேரத்தில் ராஜ அலங்காரத்தில் குடி கொண்டு அன்பர்களை பரவச படுத்தினான்...
மற்றுமொரு நிகழ்ச்சி நெருல் அருளாளர் திரு ராமகிருஷ்ணன் ஒரு பொறியியல் வல்லுநர், பஜனை பந்ததிகளிலும் கரைகண்டவர். குலதெய்வமான முருக பெருமானின் அருளால் முருக பக்தியில் ஈர்க்கப்பட்டு பல ஆராய்சிகளுக்கு பின் இதுவரை பல நூல்களை படைத்தது வெளியிட்டுள்ளார். அவற்றில்..
1. கந்தரனுபூதி விரிவுரை
2. கந்தரந்தாதி விரிவுரை
3. கந்தரலங்காரம் விரிவுரை
...போன்ற நூல்களும் அடக்கம்.
தம் படைப்புக்களை இசை வழிபாடு நிகழ்சிகளில் பெருமானின் பாத கமலங்களில் சமர்ப்பித்து பின், நம் குருவின் ஆசியுடன்தான் வெளியிடுவதை தன் கடமையாக கருதி செயல்படுகின்றார்.
அவ்வண்ணம் இந்த நினைவு விழாவில் "கந்தர் அலங்காரம் விளக்கவுரை'" நூலை வெளியிட்டார். சில அன்பர்களுக்கும் வழங்கினார். அவரது படைப்புகளை வரும் காலத்திலும் எதிர் பார்க்கிறோம்.
அன்பர்களின் பிரார்த்தனையுடன் விழா இனிதே முடிந்தது.
அன்பர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி...