“மட்டவிழ்
மலர்கொடு பணிவேனே” –
இந்த வேண்டுகோள் எங்கு வருகின்றது?
விநாயாகர் அருளை நாடி தான் பாடவிருக்கும் திருப்புகழ்
என்னும் மகா காவியத்தின் ஆரம்பமாக – நுலின் தொடக்கமாக -அமைந்திருக்கும்
பாடலில்தான் இந்த வேண்டுகோள் வருகின்றது.
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே - மணம் வீசும் மலர்களைக்
கொண்டு உன்னை பணிவேன். எல்லா கவிஞர்களுமே விநாயகனின் அருள் வேண்டி காவியத்தை
தொடங்குவார்கள். அருணகிரியும் அதற்கு விதிவிலக்கல்ல. கணபதியை வணங்கி ‘உன்னை பணிவேன்’ என்று காவியத்தை
தொடங்குகிறர்.
அவனை முதல்வோனே என்கிறார்.
ஏன் தெரியுமா? ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர்
அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால்
முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன் விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து முதலில் பெற்றதால்
முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி
பூஜையானதால் முதல்வோன்; சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை)யானதால் (கணாத்யஷன்- விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று)
முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all
ganas) முதல்வோன்.
சொல்லிக்கொண்டே போகலாம்.
அவன் எப்படி இருக்கிறான்? மத்தள வயிறு, யானை முகம். மல்யுத்தம்
செய்வதற்கு ஏதுவானது போல் பரந்த தோள்கள். கையில் கனியை வைத்திருக்கிறான்.
அவன் பார்வதி தேவியின் (உத்தமி) புதல்வனானாக்கும்.
சந்திரனையும், ஊமத்தம் பூவையும் தலயில் சூடியிருக்கும் சிவனின் ( அரன்) குமாரனுமாவன்.
அவனுடைய பராக்கிரமம் எப்படி என்றால், அன்று திரிபுரம் எரிப்பதற்கு சிவபிரான் தேரில் ஏறிச்
சென்றபொழுது அந்த தேரின் அச்சை முறியச் செய்தவன். அதுமட்டுமல்ல, வள்ளியை முருகன் திருமணம்
செய்து கொள்ள, யான வடிவம் கொண்டு உதவி செய்தவன்.
அவன் கல்வி கற்கும் அடியார்களின் புத்தியில் வாசம்
செய்பவன். மேரு மலையில் முன்பு முத்தமிழை எழுதினவன். (அகத்தியர் தமிழுக்கு
இலக்கணம் கூற அதை விநாயகன் எழுதினதை குறிப்பிடுகிறார். மகாபாரதம் எழுதிய வாரலாறுமென கொள்ளாலாம்). முற்பட
எழுதிய முதல்வோனே - வியாசர் சொன்ன வேகத்திற்கும்
மிகையாக எழுதினதால் முற்பட எழுதினவாகிறார்.
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
<!--[if !supportLineBreakNewLine]-->
<!--[endif]-->
கற்பகமே என்று துதித்தால்
போதும் அவர்களின் வினைகளை அகற்றிடுவான்
அந்த விநாயகனை, உத்தமி புதல்வனை, அரன் மகனை,
முதல்வோனை
மட்டவிழ் மலர்கொடு - தேன் துளிக்கின்ற மலர்கள்
கொண்டு- பணிவேனே- பணியமாட்டேனா?
நூலின் நாயகனை முதன் முறையாக குறிப்பிடும் பொழுது கந்தன்,
முருகன், குமரன் என்று சொல்லாமல் ‘சுப்பிரமணி’
என்று சொல்வது ஒரு
சிறப்பு, அருணகிரி நாதர் வேதங்கள், உபநிடதம் பற்றி அறிந்தவர். வேதத்தில் பெயர் குறிப்பிட்டு சொன்ன கடவுளான சுப்ரமணியனை ( சிவபிரானை
‘ஸதாசிவோம்’ என்பதுபோல் முருகனை “ஸுப்ரஹ்மண்யோம் என்று) நினைவு கூறும் வகையில்
இங்கு, வேதத்தை ஒத்த
திருப்புகழில், தொடக்கத்திலே அழைத்திருப்பதுதான் அந்த சிறப்பு. சுப்பிரம்ணீயம்
என்ற ஒரு நிலை சாதக்கன் ஒருவன் எட்டிப்பிடிக்கவேண்டிய ஒரு உன்னத நிலை. அதை அடைந்தபிறகு
கிடைக்கவேண்டியது எதுவுமிலையென்றே சொல்லாம். சாதகன் வளர்ச்சிக்கு உதவிகிறவன் என்ற
பொருளும் சுப்பிரணியத்துக்கு உண்டு. திருப்புகழ் இசைவழிபாடு நடத்தப்
போகவிற்கும் சாதகன் ஒருவன் சுப்ரமணிய நிலையை அடைய வேண்டுவதற்கு
ஆரம்பத்திலேயே நினைவூட்டுகின்றார் போலும். வேள்விகளை அனுஷ்டிக்கும் சமயம் வணங்க வேண்டியவன்
‘ஸுப்ரஹ்மண்யன்’. திருப்புகழ் ஓதுவதும் ஒரு
வேள்விதானே! இதேப்போல் சுப்ரமணி என்று
திருப்புகழில் வெகு சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்.
விநாயகனை வழிபடாமல் சென்றதால் சிவனின் தேரின் அச்சு (axil) உடைந்தது. விநாயகன் வந்து
உதவி செய்யாதவரை முருகனால் வள்ளியை மணம் செய்து கொள்ள முடியவில்லை. இதை
குறிப்பிட்டு, தன் முயற்சியில் வெற்றி அடைய அய்யா கணபதி, உன்னை வணங்குகிறேன்
என்கிறார் அருணகிரி.
காளிதாஸன் இரகுவம்ச காவிய ரம்பத்தில் ‘ஜகதப்பிதரெள’ என்று பார்வதியையும்,
சிவனையும்
குறிப்பிட்ட மாதிரி, இங்கு அருணகிரி நாதரும் உலக தாய் தந்தையாரான பார்வதியையும் ( உத்தமி ), சிவனையையும் ( மத்தமும்
மதியும் வைத்திடும் அரன்) குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.
‘கற்றிடும் அடியவர் புத்தியில்
உறைபவ’ என்று கணபதியை இங்கு குறிப்பிட்டது போல், ‘புலவர் நாவில்
உறைவோனே’ என்று முருகனை வேறோரிடத்தில்
அழைக்கிறார். ‘முனிவர்தம் அகத்தினில் ஒளிர் தருவாய்’ என்று கண்ணனை பாஞ்சாலி சபதத்திலும், ‘கூறு பாவலர் உள்ளத்தில் இருப்பாள்’ என்று சரஸ்வதியை பாரதி சொல்வது நம் நினவுக்கு வரலாம். வெளியிலெங்கும் தேடவேண்டாம், உள்ளத்தில்
உறைபவனை உணர்ந்தால் போதும் என்பதுதான் ஞானிகர்களின் அநுபவம். உள்ளத்தில் கோயில் கட்டி
அதற்கு குடமுழுகாட்டிய பூசலார் நாயானார் வரலாற்றை நாம் மறந்துவிட முடியுமா?
அன்பர்களின் ஆனந்த
கண்ணீரே இறைவனின் நீராடல் என்று அருணகிரி நாதர் பிரிதொரு பாடலில் கூறவில்லையா?
அவனை மட்டவிழ் மலர் கொண்டு பணிவோம்.
சாந்தா &
சுந்தர ராஜன்